மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் வந்த போது மின் தடை ஏன்? நிர்மல் குமார் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பேட்டி அளித்துக் கொண்டிருந்த போது அடுத்தடுத்து இரு முறை மின் தடை ஏற்பட்டது ஏன் என்பது குறித்து மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், இன்று மாலை 5.35 மணிக்கு வந்தார். அங்கு அவர் தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த போது மணி 6.25- ஆக இருந்தது.

Nirmal Kumar

குடியரசுத் துணைத் தலைவர், கோயிலுக்கு வருவதால் அவர் வருகையின் போது மின் இணைப்பு துண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக இன்று மாலை 3.30 மணி முதலே ஜெனரேட்டர் மூலம் கோயில் முழுவதும் மின் விநியோகம் செய்யப்பட்டது.

மின் இணைப்பு துண்டிப்பு

மின் இணைப்பு துண்டிக்கப்படாத வகையில் அங்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அது போல் திருக்கோயில் பவர் ஹவுஸில் மின்சார வாரியத்தின் உதவி பொறியாளர் இருந்தார்.

மின் தடை ஏன்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனத்தை முடித்த குடியரசுத் துணைத் தலைவர், கிழக்கு கோபுரத்தின் முன்பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோயில் மின் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட கோளாறால் மின் தடை ஏற்பட்டது. உடனடியாக 2 நிமிடங்களில் மின்சாரம் ஜெனரேட்டரில் இருந்து மின்வாரிய இணைப்புக்கு மாற்றப்பட்டது. இவ்வாறு நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் கோயில் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: தமிழர் ஒருவர் பிரதமர் ஆக வாய்ப்பிருக்கிறது.

தமிழரக் பிரதமராவார்- அடித்து சொன்ன சிபிஆர்

கர்நாடகாவை சேர்ந்தவர், குஜராத்தை சேர்ந்தவர் பிரதமராகியுள்ள போது தமிழரும் பிரதமராகலாம். ஒரு நாள் தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார். பிரதமர் மோடி, முதல்வர் விஜய் ஆகிய இருவரது ஆட்சி குறித்து நான் கருத்து கூற முடியாது.

இந்தியா வல்லரசு

அவர்களது ஆட்சி குறித்து கருத்து கூற பல்வேறு அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். இந்தியா வல்லரசு நாடாவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. மதுரை மீனாட்சி அம்மன் ஆசியால் நல்லது நடக்கும். எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்றார்.

பசும்பொன்னில் குடியரசுத் துணைத் தலைவர்

இந்த பேட்டியின் போதுதான் மின் தடை ஏற்பட்டது. முன்னதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் 119 ஆவது பிறந்தநாள் மற்றும் 64 ஆவது குருபூஜை விழாவில் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மின் தடை

தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தது முதல் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது. இதை ஆரம்பத்தில் ஒப்புக் கொள்ளாத தவெக அமைச்சர்கள், பிறகு அவர்களது நிகழ்ச்சிகளிலேயே மின் தடை ஏற்பட்ட போதுதான் ஒருவழியாக முழுவதும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் பல்வேறு சாக்குகளை கூறி வந்தனர்.

மறியல்

அந்த வகையில் உயர்நீதிமன்ற நீதிபதி, தவெக அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட விழாக்களில் எல்லாம் மின் தடை ஏற்பட்டது. தமிழகத்தில் அமலில் இருக்கும் அறிவிக்கப்படாத மின்தடையால் மக்கள் சாலை மறியல், போராட்டங்களில் ஈடுபடுவது வாடிக்கையாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+