எத்தனை காலம்தான் தவெகவின் பொய் வழக்கை திமுக எதிர்கொள்வது? விரைவில்... ரகுபதி வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக மீது பொய் வழக்கு போடும் தவெக மீது நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தொடுக்க போகிறோம், எத்தனை நாட்கள்தான் அவர்களது பொய் வழக்குகளை எதிர்கொள்வது என திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுக்கோட்டை நகரமன்றத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ரகுபதி தமிழக வெற்றிக் கழக அரசு தற்போது எந்த திட்டத்தை தொடங்கி வைத்தாலும் அது திராவிட மாடல் ஆட்சியில் போடப்பட்ட திட்டமாக தான் இருக்கும்.

DMK Ragupathi criticises TVK government

இதேபோன்றுதான் திமுக ஆட்சியில் நீதி ஒதுக்கப்பட்டு புதுக்கோட்டையில் தொடங்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் உள்ளிட்டவைகளை தமிழக முதல்வர் திறந்து வைக்க போகிறார். இது போன்று தமிழகம் முழுவதும் தொடங்கப்படும் திட்டம் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் தான்.

விராலிமலை சட்டசபைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் எப்போது அனுமதிக்கிறதோ அப்போதுதான் தேர்தல் நடைபெறும். எப்போது தேர்தல் நடந்தாலும் விராலிமலை சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும். மக்கள் தற்போது தவெக ஆட்சியில் ஏமாற்றத்தை சந்தித்து விட்டனர். உதயசூரியன் பிரகாசிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து விட்டோம்.

அனைத்து தரப்பு மக்களும் விலைவாசி உயர்வு, காணாமல் போகும் சிறுமியர்கள் கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினர் தடுமாறுவது உள்ளிட்டவைகளை கண்டு பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதன் வெளிப்பாடு இடைத்தேர்தலில் வெளிப்படும் என்றார்.

விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் திமுக பொறுப்பாளர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் நேற்று இணைந்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் உள்ளடி வேலை பார்த்தவர்கள் தற்போது வெளிப்படையாக கட்சியை விட்டு விலகி உள்ளனர்.

இதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. துரோகிகளை நாங்கள் வைத்துக் கொள்ள மாட்டோம். இந்த அரசு அனைத்திலும் தோல்வி அடைந்து விட்டது . நல்ல ஒரு ஆட்சியை தர முடியவில்லை. மக்களிடம் இந்த ஆட்சி இருந்து வெறுப்பை சம்பாதித்துள்ளது.

இதையெல்லாம் மடை மாற்றுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல்வேறு வகைகளில் விமர்சனம் செய்து சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி பழி போட்டுக் கொண்டுள்ளனர். அவைகளை தூள் தூளாக நீதிமன்றத்தின் மூலமாக நாங்கள் நிரூபித்து வெற்றி காண்போம்.
சோதனை செய்து ஆவணங்களை கண்டுபிடித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை கூறினாலும் அவைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நிரூபிக்க வேண்டும்.

ஏற்கனவே அதிமுக ஆட்சிக்காலத்தில் திமுகவினர் மீது பல்வேறு வழக்குகளை போட்டனர். அதையெல்லாம் தூள் தூளாக நொறுக்கி நாங்கள் நிரபராதி என்று நிரூபித்து விட்டோம்.

முதல்வர் எந்த ஃபைலை வேண்டுமானாலும் ஓபன் செய்யட்டும். கடைசியாக நீதிமன்றத்தில்தான் நாங்கள் நிரபராதி என்று நிரூபிப்போம். பொய்யான வழக்குகளை சுமத்தி வருவதற்காக அவர்கள் மீது நாங்கள் வழக்கு தொடர உள்ளோம்.

எவ்வளவு காலத்திற்கு தான் நாங்கள் பொய்யான வழக்குகளை எதிர்கொள்வது? இனி நீதிமன்றத்தில் எதிர் வழக்கு தொடுக்க போகிறோம். எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

சிறை துறை என்பது சிறப்பான துறையாக திமுக ஆட்சியில் இருந்தது. ஆனால் தற்பொழுது அது சீரழிந்து விட்டது. இந்தியாவிலேயே முதலிடத்தை சிறைத் துறையில் தமிழகம் பெற்று இருந்தது. திமுக ஆட்சி காலத்தில் அதற்காக மத்திய அரசின் பரிசை நாங்கள் பெற்றுள்ளோம். இவ்வாறு முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+