Viruchigam: விருச்சிக ராசியினரின் பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு.. பணத்தில் நீச்சலடிக்கும் யோகம்
January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும் இருக்கின்றனர். இந்த கிரகங்களின் அடிப்படையில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் எப்படி இருக்கும். என்ன பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கையிருப்பு நிறைய இருக்கும். இழந்த பொருள்கள் மீண்டும் கிடைக்கும். யோகமான மாதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கம் ஏற்படும். குருவுக்கும், சுக்கிரனுக்கும் இடையே நல்ல தொடர்பு ஏற்படுவதால் நல்ல வருமானம் உண்டாகும். நல்ல வருமானத்தை தரும்.
வருமானம் பெருகும்
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் வருமானம் பெருகும். திருமணமாகும் யோகம் உண்டு. புதிய வரவு ஏற்படும். அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசு அதிகாரிகள் சில விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. லஞ்சம் தொடர்பான விஷயங்களில் சிக்கும் வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மகள் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
முயற்சிகளில் வெற்றி
சனி 5 இல் அமர்ந்திருப்பதால் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சில விஷயங்களில் தாமதமானாலும் வெற்றி உண்டாகும். வீடு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. குரு 8 இல் அமர்ந்திருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். 6 ஆம் இடத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
வருமானம் உயரும்
வேலைவாய்ப்பினால் வருமானம் உயரக்கூடிய வாய்ப்பு உண்டாகும். எதிரிகளோடு கடுமையான வாக்குவாதங்கள் நடக்கும். வயிறு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள், பாதிப்புகள் ஏற்படும். செரிமானக் கோளாறு ஏற்படும் வாய்ப்புள்ளது. திருமணம், சந்தோஷம் உண்டாகும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். வெளிநாட்டு வாய்ப்புகள் கூடி வரும்.
திடீர் செலவுகள்
அஷ்டமத்தில் குரு அமர்ந்திருப்பதால் நிறைய செலவுகள், திடீர் செலவுகள் ஏற்படும். திடீர் தன வரவுகள் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. 10 ஆம் இடத்தில் கேது பகவான் இருப்பதால் உத்தியோக ஸ்தானத்தில் சில பிரச்சனைகள் இருக்கும். புதிய உத்தியோகம் கிடைக்கும் யோகம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் ஏற்படும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நினைத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். நல்ல வருமானம் பெறுவீர்கள். இழந்த காசு பணம் மீண்டும் வந்து சேரும். தன ஸ்தானத்தில் 4 கிரகங்கள் இருப்பதால் சிவகாம சுந்தரி வழிபாடு உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications