ஜூலை மாத ராசி பலன் 2021: மிதுன ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் கூடி வரும்
ஜூலை மாதம் மிதுன ராசிக்காரர்களின் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். சனிபகவானால் விபரீத ராஜயோகம் கூடி வரும்.
சென்னை: மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் அற்புதமான மாதமாக அமையப்போகிறது. குருவின் பார்வையாலும் சனியின் சஞ்சாரத்தினாலும் விபரீத ராஜயோகம் தேடி வரும் மாதமாக ஜூலை மாதம் அமைந்துள்ளது. பண வருமானம் அதிகரிக்கும் அதிர்ஷ்டம் கை கூடி வரும் மாதமாக அமைந்துள்ளது. தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.
ஆனி மாதமும் ஆடி மாதமும் இணைந்த மாதம் ஜூலை மாதம். சூரியன் முதல் 15 நாட்கள் மிதுன ராசியிலும் பிற்பாதி 15 நாட்கள் கடக ராசியிலும் பயணம் செய்வார். இந்த மாதத்தில் சுக்கிரன் கடக ராசியிலும் சிம்மம், கன்னி ராசியிலும் பயணம் செய்வார். புதன் ரிஷபத்தில் மிதுனம், கடக ராசியிலும் பயணம் செய்வார்.
செவ்வாய் கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, சேர்க்கை, கிரகங்களின் பார்வைகளைப் பொருத்து உங்கள் ராசிக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

ஆதாயம் கிடைக்கும்
7ஆம் தேதிக்கு மேல் புதன் உங்கள் ராசிக்கு ஆட்சி பெற்று அமர்வதால் நினைத்த காரியம் நிறைவேறும் ஆற்றல் அதிகரிக்கும். சுக ஸ்தானாதிபதியும் புதன்தான். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். 25ஆம் தேதி புதன் கடக ராசிக்கு மாறுவதால் வெளிநாடு, வெளியூர்களில் இருந்து ஆதாயம் கிடைக்கும். வெளியூரில் வசிப்பவர்களால் நன்மைகள் நடைபெறும்.

சுப காரிய தடை நீங்கும்
சுக்கிரன் கடக ராசியில் செவ்வாயுடன் இணைந்திருப்பதால் பண விசயங்களில் இருந்த சிக்கல்கள் நீங்கும். குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்படும் மன வருத்தங்கள் நீங்க விட்டுக்கொடுத்து செல்லவும். தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமணம் யோகம் கைகூடி வரும். சுப பேச்சுவார்த்தைகளில் சில தடைகள் வந்து செல்லும் காரணம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் உள்ள சுக்கிரன் செவ்வாய் மீது சனியின் பார்வை விழுகிறது.

தடைகள் நீங்கும்
சனிபகவான் அஷ்டம ஸ்தானத்தில் வக்ரம் பெற்று சஞ்சரிப்பதால் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அஷ்டம சனியால் ஏற்பட்ட கஷ்டங்கள் இந்த மாதத்தில் முடிவுக்கு வரும். விபரீத ராஜயோகம் உங்களுக்கு இந்த மாதம் கை கொடுக்கும். சுப காரியங்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் கவுரவம் அதிகரிக்கும். பேச்சிற்கு மதிப்பு கூடும்.

குழப்பம் நீங்கும்
மாத பிற்பகுதியில் 16ஆம் தேதி சூரியன் இடப்பெயர்ச்சி அடைவதால் உடன் பிறப்புகள் மூலம் வருமானம் வரும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் சுக்கிரன் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications