இன்ப அதிர்ச்சி காத்திருக்கு.. சிம்மம் ராசிக்கு 30 நாட்களில் கிடைக்கப் போகும் மெகா சர்ப்ரைஸ்
மாத பலன்: ஜூன் மாதம் நிறைவடைந்து ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. இந்த ஜூலை மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பது கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகப் பெயர்ச்சிகளானது ஒவ்வொரு ராசியிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாதத்தில் ரிஷப ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் குரு, சூரியனும் இணைந்திருக்கின்றனர். கடகத்தில் புதன், சிம்மத்தில் கேதுவும், செவ்வாயும் உள்ளனர்.

கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும், மாதத் தொடக்கத்தில் சிம்ம ராசியில் சந்திர பகவான் உள்ளனர். இந்த மாதத்தின் 17 ஆம் தேதி சூரியன் கடக ராசிக்கு வருகிறார். கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் மிதுன ராசிக்குச் செல்கிறார். 26 ஆம் தேதி சுக்கிர பகவான் மிதுன ராசிக்கும், 29 ஆம் தேதி சிம்மத்தில் இருக்கும் செவ்வாய் கன்னி ராசிக்குள் வருகிறார்.
அந்த வகையில், இந்த ஜூலை மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், தெய்வ வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியாதிபதி சூரியன் 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் இருக்கிறார். அங்கு குருவும், சூரியனும் ஒன்றாக பயணிக்கிறார்கள். இதனை சிவ ராஜ யோகம் என்பார்கள். சுக்கிர பகவான் 10 ஆம் இடத்தில் ஆட்சி பலத்தில் வலுவாக இருக்கிறார். இதனால் தொழில், உத்யோகத்தில் அற்புதமான பலன்கள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியம் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
உத்யோகம்
இறங்கிய காரியங்களில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். உங்களின் பத்தாம் அதிபதியான சுக்கிரன், 10 ஆம் இடத்திலேயே ஆட்சி பலத்தில் இருப்பதால் உத்யோகத்தில் நல்ல மாற்றங்கள் நிகழும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல உத்யோகம் கிடைக்கும். சிலருக்கு உத்யோக ரீதியாக அதிகாரமிக்க பொறுப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
பண வரவு
தொழிலில் நல்ல ஏற்றம் உண்டாகும். உங்களின் புதிய முயற்சிகளை செயல்படுத்தி உயர்வை சந்திப்பீர்கள். தெளிவான சிந்தனையால் எண்ணங்களில் தெளிவு காணப்படும். உங்கள் ராசியிலேயே கேது பகவான் இருப்பார். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் உயர்வு காணப்படும்.
அதிர்ஷ்டம்
தொலைதூர தொடர்புகளால் ஆதாயம் உண்டு. வெளிநாடு சம்பந்தப்பட்ட முயற்சிகள் கைக்கூடும். வேற்று மொழி மனிதர்களால் நன்மை பெறுவீர்கள். ஐடி, ஏற்றுமதி, இறக்குமதி, ரியல் எஸ்டேட், கலை, ஊடகம் துறைகளில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். எட்டாம் அதிபதி 13 ஆம் இடத்தில் இருப்பதால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். எதிர்பாராத நேரத்தில் திடீர் பண வரவு ஏற்படும். தடைபட்ட காரியங்கள் நடைபெறும்.
பயணங்கள்
பழைய பாக்கி வசூலாகும். பங்குசந்தை, லாட்டரி தொடர்பான முதலீடுகளில் லாபம் கிடைக்கும். சகோதர வழி உறவுகளால் அணுகூலம் பெறுவீர்கள். குரு பகவான் மூன்றாம் இடத்தை பார்க்கிறார். சமூகத்தில் உங்களின் பெயர், புகழ் அதிகரிக்கும். உத்யோகம், தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பயணங்களில் ஆதாயம் ஏற்படும்.
குழந்தைகள்
சனி பகவான் வருகிற 13.7.2025 வக்கிரமாகப் போகிறார். இதன் காரணமாக ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். மந்தநிலை குறையும். குரு தன் வீட்டை தானே பார்ப்பதால் காதல் உறவில் இனிமை கூடும். பூர்விக சொத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளுக்கு எல்லாமே நன்மையாக இருக்கும்.
உயர்வு
தடைபட்ட சுப காரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நிலம், வீடு, வண்டி, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. இன்ப அதிர்ச்சியான தகவலால் வாழ்க்கையில் உயர்வு காணப்படும்.
கவனம்
புதன் பகவானால் வீண் விரயம் நிச்சயம் ஏற்படும். செலவுகளை சுப செலவுகளாக மாற்றிக் கொள்வது சாமர்த்தியம். அஷ்டம சனியால் உத்யோகம், தொழிலில் பணிச்சுமை, அலைச்சல், அழுத்தம் இருக்கும். மனதில் அவ்வபோது சஞ்சலம் ஏற்படும். கணவன் - மனைவி உறவில் சின்ன சின்ன கருத்து வேறுபாடு வந்து நீங்கும். எனவே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
பரிகாரம்
குடும்பத்தில் அந்நியர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. செவ்வாய்கிழமை தோறும் முருகன் கோயில் சென்று வழிபடுவது வாழ்க்கையில் நல்ல ஏற்றத்தை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications