பிரச்சனைகளுக்கு ரெஸ்ட்.. கும்பம் ராசிக்கு இனி எல்லாமே பெஸ்ட்.. என்ஜாய்
ஜூலை மாத பலன்: 2025 ஆம் ஆண்டிற்கான ஜூலை மாதம் பிறந்துள்ளது. இந்த ஜூலை மாதத்தில் கும்பம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த இடப்பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் ஏற்படுத்தும். அந்த வகையில், ஜூலை மாதத்தில் கும்பம் ராசிக்கு கிரக நிலைகள் எப்படி இருக்கின்றன, அதன் மூலம் கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கும்பம் ராசி பலன்
கும்பம் ராசிக்காரர்களுக்கு உங்கள் மன வலிகளுக்கு ஆறுதல் தருமளவுக்கு இந்த மாதம் நல்ல பலன்களை கொடுக்கும். ஐந்தாம் வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டிலேயே அமர்ந்திருப்பது அற்புதமான பலன்களை கொடுக்கும். பாத சனி இருக்கும் சுவடே தெரியாதளவுக்கு சிறப்பான லாபம் கிடைக்கும். சிவ ராஜயோகத்தால் மன சஞ்சலங்கள் விலகும்.
வெற்றி
மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, மனம் தெளிவடையும். புதன் வீட்டிலேயே புதன் இருப்பது, அங்கு சூரியனுடனான இணைவு சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் ஏற்பட்ட தடைகள் விலகி நல்ல பலன்கள் கிடைக்கும். அரசுப் பணி, போட்டித் தேர்வுகளுக்கு முயற்சி செய்வோருக்கு இந்த காலத்தில் வெற்றி கிடைக்கும்.
மன மகிழ்ச்சி
குரு உங்கள் ராசியை பார்ப்பதும் சிறப்பான வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் மலை போல இருந்த பிரச்னைகள் பனிபோல விலகும். அதிகளவு சேவைப்பணிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட காலத்துக்கு பிறகு மனம் விட்டு சிரிப்பீர்கள். சமூகத்தில் உங்களின் பெருமை அதிகரிக்கும். விவசாயத்தில் நல்ல ஏற்றம் காண்பீர்கள்.
கணவன் - மனைவி
கடந்த காலங்களில் ஏங்கிய விஷயங்கள் எல்லாம் இப்போது எளிதாக கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. காதல் உறவில் இனிமைக் கூடும். கணவன் - மனைவி இடையே மோதல் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். குல தெய்வத்தின் அருள் அற்புதமாக இருக்கும். ஆன்மிகம் சார்ந்த பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
கவனம்
பணிச்சுமை அதிகமாக இருக்கும். அவ்வபோது மனதில் கவலைகள் வந்து செல்லும். வார்த்தைகளில் கவனம் தேவை. ஆன்லைன் மோசடி,
சூதாட்டம் ஆகியவற்றில் சிக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆன்லைன் முதலீடு பக்கம் எட்டிக் கூட பார்க்க வேண்டாம். பணம் கொடுக்கல், வாங்கலிலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சனி இரண்டாம் வீட்டில் இருப்பதால் முதியவர்களின் குமுறல் அதிகமாக இருக்கும்.
பரிகாரம்
குரு ஐந்தாம் இடத்தில் இருப்பதால் சிந்தனையில் தடுமாற்றம், பேராசை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆரோக்கியம் மற்றும் உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் வேண்டும். கேது பகவானால் உடல் சோர்வும் அதிகமாக காணப்படும். உங்கள் வீட்டின் அருகே உள்ள அம்மன் கோயில் சென்று வழிபடுவது நற்பலன்களை கொடுக்கும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications