ஜூன் ராசி பலன்: புது காரு.. புது வீடு.. தனுசு ராசிக்கு குஷியோ குஷிதான்.. ராஜவாழ்க்கை
ஜூன் மாத ராசி பலன்கள்: 2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த 3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஜூன் மாதத்தை பொறுத்தவரை 29 ஆம் தேதி மேஷத்தில் உள்ள சுக்கிர பகவான் ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். ஆனி 15 ஆம் தேதி சூரியன் ரிஷபத்தில் இருந்து, மிதுன ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். அங்கு ஏற்கனவே குரு மற்றும் புதன் பகவான்கள் உள்ளனர். புதன் பகவான் 22 ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கேது பகவான் சிம்ம ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், சனி பகவான் மீன ராசியிலும் உள்ளனர்.

ஜூன் 7 ஆம் தேதி ஏகாதசி, 8, 23 தேதிகளில் பிரதோஷம் வருகிறது. 25 ஆம் தேதி அமாவாசை உள்ளது. மேலும் பஞ்சாங்கப்படி இந்த மாதத்தில் ஆந்திராவிலே புயல் மழை, நம் எல்லையில் பதற்றம் நிலவுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த மாதம் தனுசு ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இலக்குகளை தெளிவாக அடைவதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். தெளிந்த திட்டம், செயல் ஆகியவற்றுக்கு உதாரணமாக இருப்பார்கள். குடும்பம், உத்யோகம் இரண்டிலும் தங்களின் தனித்துவமான செயல்பாடுகளால் முத்திரை பதிப்பார்கள். கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள்.
சொத்து
தனுசு ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் கேது பகவானும், மூன்றாம் இடத்தில் ராகு பகவானும் உள்ளனர். ஐந்தாம் இடத்தில் சுக்கிர பகவான் உள்ளார். இதனால் புதிய கார், இருசக்கர வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. நிலம், வீடு வாங்குவதற்கான அமைப்பும் உள்ளது. அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு வாசற்கதவை தட்டும்.
முன்னேற்றம்
கணவன் - மனைவி உறவில் அன்யோன்யம் கூடும். காதல் உறவில் வெற்றி கிடைக்கும். சுக்கிர பகவானால் பெண்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். உத்யோகத்தில் கூடுதல் பொறுப்புகள் தேடி வரும். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். உயர்கல்விக்கு முயற்சி செய்வோருக்கு நல்ல செய்தி கிடைக்கும். பொறியியல் சம்பந்தப்பட்ட கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
சுப காரியம்
மாடலிங், ஐடி, கலை, சினிமா ஊடகம் உள்ளிட்ட துறைகளில் இருப்போருக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் விவிஐபிகள், அரசியல் வாதிகளின் தொடர்பால் ஆதாயம் உண்டு. புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். சுப காரிய தடைகள் விலகும். நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகம் கூடி வரும்.
கவனம்
பயணங்களில் கவனம் அவசியம். கவனம் தவறினால் பயணத்தில் வம்பு, வழக்குகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். பயணங்களின் போது பணம், நகை உள்ளிட்ட உடைமைகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். சொத்து வாங்குவதில் சட்ட சிக்கல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
பரிகாரம்
கேது பகவான் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் தந்தையின் உடல்நலத்தின் கவனம் வேண்டும். சிலருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. சுவாமி மலை முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். அருகில் உள்ள விநாயகர் கோயில்களுக்கு சென்று வழிபடுவதால் காரிய தடைகள் விலகும்.












Click it and Unblock the Notifications