Kadagam Rasi Palan: கடக ராசிக்கு கடன் பிரச்சனை தீரப்போகுது.. தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்
வார ராசி பலன்: டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு நல்ல அனுகூலமான காலகட்டமாக இருக்கும். பழைய கடன்களை அடைக்கும் யோகம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். பதவி உயர்வில் இருந்த தடைகள் நீங்கும். சம்பள உயர்வு கிடைக்கும். தொட்டது துலங்கக்கூடிய யோகம் உண்டாகும். வழக்குகளில் வெற்றிகள் கிடைக்கும். அரசுத் துறை, அரசியல்வாதிகள் மிகப்பெரிய நன்மையையும், சந்தோஷத்தையும் பெறும் அமைப்புள்ளது.
வழிபாடு
நவக்கிரகத்தில் ராகு வழிபாடு உங்களுக்கு யோக பலத்தையும், சந்தோஷத்தையும் தரும். கோளார் பதிகத்தை கேட்பது நன்மையை ஏற்படுத்தும். யோகமும், அனுகூலமும் பெரிய நன்மையை ஏற்படுத்தும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படுத்தும். ரத்தபந்த உறவுகள், உறவுகளில் அனுகூலம் காணப்படும்.
கடன் பிரச்சனை நீங்கும்
கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். மன அழுத்தம் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொடர்ச்சியாக இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது. வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் பரிபூரண நிவர்த்தியாகும். உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும்.
பதவி உயர்வு
பதவி உயர்வு கிடைக்கும். உள்ளூர் பயணம், வெளியூர் பயணம், கடல் கடந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். வேற்று மொழி மனிதர்களால் அதிகம் ஆதாயம் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகல் வந்து சேரும். பொருளாதாரம் ரீதியாக ஏற்றம் பெறுவீர்கள். எடுத்த காரியங்களில் ஏற்றத்தைப் பெறுவீர்கள். குலதெய்வ வழிபாடுகளை தவறாமல் செய்வது நன்மை பயக்கும்.












Click it and Unblock the Notifications