Masi Matha Palan: கடக ராசியை சுத்துப் போடும் கிரகங்கள்.. பட்ட இடத்திலேயே படும்.. கவனம்
Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் கடக ராசியினருக்கு (Kadagam Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

சிவனுக்கு வழிபாடு செய்வது, ஆராதனை செய்வது, இரவு நேரம் கண் விழித்து சிவனுக்கு செய்யக்கூடிய தொண்டு திருப்தியைக் கொடுக்கும். உங்களுடைய கர்மாக்கள் நிவர்த்தியாகும். இந்த மாசி மாதத்தில் கடக ராசியினருக்கான முழு பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அஷ்டமத்தில் ஏராளமான கிரகங்கள் அணிவகுத்து இருக்கின்றன. தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு, குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கு உடல்நல பாதிப்பு, எலும்பில் அடிபடுவது, கால்களில் அடிபடுவது போன் சூழ்நிலை ஏற்படும். தேவையில்லாமல் நண்பர்களிடத்தில் பணத்தைக் கொடுத்து ஏமாறும் சூழல் ஏற்படும்.
பண வரவு உண்டு
குருவுடைய பார்வை பலம் இருப்பதால் பிறருக்கு கொடுத்த பணங்கள் வெளிவரும் பாக்கியம் உண்டு. பட்ட இடத்திலேய பட்டாலும் அதில் இருந்து வெளிவரும் வாய்ப்புள்ளது. நிறைய பேருக்கு எதிர்பாராத ஆஃபர்கள், வாய்ப்புகள் போன்றவை கிடைக்கும் யோகம் உண்டு. அஷ்டம ஸ்தானத்தில் கிரகங்கள் இருக்கும்போது நீங்கள் நினைக்காத விஷயங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும்.
கத்தி மேல் நடக்கும் சூழல்
பார்ப்பதற்கும், கேட்பதற்காகவும் அநாகரீகமாக இருந்தாலும் அவை கடைசியில் சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் போது வாங்கும் சூழல் ஏற்படும். அந்த மாதிரியான சாதகமான விஷயங்கள் நடக்கும். கத்தி மேல் நடப்பது போன்ற சூழல்கள் உண்டு. வீட்டில் ஏற்படும் சின்ன வாக்குவாதம், பிரச்சனை, ஆரோக்கிய குறைபாடுகளை உடனடியாக சரிசெய்து கொள்ள வேண்டும்.
பொறுமை அவசியம்
பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் வாக்குவாதம், பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இணக்கமாகச் செல்வது நல்லது. திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் உண்டாகும். உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொழில் தொடர்பான விஷயங்களில் நிதானம், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
வழிபாடு
ஆரோக்கியம் விஷயத்தில் கவனம் செலுத்தாவிடில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சூழல் உண்டாகும். முக்கியமான விஷயங்கள் எல்லாம் தள்ளிப்போய் நடக்கும். அயோத்தியில் உள்ள ராமர் வழிபாடு, ஏரிகாத்த ராமர் வழிபாடு உங்களுக்கு அற்புதமான ஏற்றத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும்












Click it and Unblock the Notifications