Rasi Palan This Week: கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்
Kadagam Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன் (Kadagam Rasi Palan)
கடகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் யோக பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். வாகனம் ஓட்டும்போது விதிமுறைகளைக் கடைப்பிடித்து, நிதானமாக செல்வது நன்மை பயக்கும்.
தொழில் அமையும்
பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். அஷ்டம ஸ்தானத்தில் குரு பார்வை இருப்பதால் திடீர் பண வரவு உண்டாகும். நண்பர்களால் கிடைக்கும் புதிய உறவுகள் மூலமாக தொழில் அமைவது, அதன் மூலமாக பண வரவு வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். தைரியம், நம்பிக்கை அதிகரிக்கும். வண்டி, வாகனத்தில் சிறு சிறு பழுதுகளை நீக்குவீர்கள்.
கவனம்
ஆண்களுக்கு இந்த வாரம் முழுவதும் பிரஷர், டென்ஷன் இருக்கும். அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் அமைந்திருப்பதால் வயிறு, கழிவுப் பாதை மற்றும் சுகாதாரத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 7 ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய் இருப்பது அங்கு 2 ஆம் இடத்தில் கேது இருப்பதால் குடும்பத்தில் பிரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
ஆரோக்கியம்
நிறைய பேர் பல், கண், முகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெறுவீர்கள். மார்ச் 14 ஆம் தேதி வரை தேவையில்லாத டென்ஷன், விரக்தி ஏற்படும். நரசிம்மர், துர்க்கை வழிபாடு மன நிம்மதியை ஏற்படுத்தும். உடனிருப்பவர்கள் தேவையில்லாத சங்கடம், மன கஷ்டத்தை ஏற்படும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
வழிபாடு
பெண்கள் சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். தொழில் தொடர்பான விஷயங்களில் பொறுமையாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. முருகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். புதன்கிழமை தோறும் ஏழைகளுக்கு சாப்பாடு, எலுமிச்சை ஊறுகாய் தானமாகக் கொடுப்பது ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications