Kadagam Rasi Palan: கடக ராசிக்கு வீடு, நிலம்னு செட்டிலாகும் யோகம்.. கவர்ன்மென்ட் வேலை கன்ஃபார்ம்
Kadagam Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன் (Kadagam Rasi Palan)
கடகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்கள் நிறைய பேர் வீடு வாங்குவது, நிலம் வாங்குவது போன்ற யோகம் உண்டாகும். வீட்டை இடித்துக் கட்டும் யோகம் உண்டாகும். அரசு வங்கியில் வேலை கிடைக்கும் யோகம் உண்டாகும். அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். அம்மாவுக்கும், உங்களுக்கும் இருந்து வந்த வாக்குவாதங்கள் நீங்கும். பிரச்சனைகள் ஓயும்.
வீடு நிலம் வாங்கும் யோகம்
பெரிய வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். ஊருக்கு வெளியே மருத்துவமனை, கல்வி நிலையங்களுக்கு அருகே வாங்கும் அமைப்பு உள்ளது. எந்த விஷயத்திலும் தடை, தாமதம் இல்லாமல் ஜெயிப்பீர்கள். ஆரோக்கியத்தில் ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. உங்களுடைய பேச்சுகள் நடவடிக்கைகளாக மாறும்.
ஆரோக்கியம்
பல பிரச்சனைகள் ஓயும். மார்பகம், நெஞ்சகம், நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் தேவை. குளிர்ச்சியான பொருள்களைத் தவிர்ப்பது நல்லது. நவக்கிரகத்தில் செவ்வாய் வழிபாடு செய்வது செல்வாக்கை பெற்றுத் தரும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் ரீதியாக யோகமும், நம்பிக்கையும் ஏற்படும்.
அனுகூலம்
சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் சிறிது சங்கடங்கள் இருந்தாலும் விரைவில் அவை நிவர்த்தியாகும். எல்லா விஷயங்களும் கைகூடும். உடனிருப்பவர்கள் செய்யும் சில வேலைகளால் தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தடைகள் பனிபோல் விலகும்.
கவனம்
நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பது போல நடித்து குழி பறிப்பார்கள் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் சமயத்தில் புதிய அறிமுகத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். உறவுமுறைகள், அக்கம்பக்கத்தில் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வார்த்தைகளுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கோளார் பதிகத்தை சொல்ல சொல்ல வெற்றிகள் ஏற்படும்.












Click it and Unblock the Notifications