Rasi Palan This Week: கடக ராசிக்கு 15 நாட்களில் அடிக்கப் போகும் ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் துலங்கும்
Kadagam Rasi Palan: மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 16 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடகம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 16 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன் (Kadagam Rasi Palan)
கடக ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். மற்றவர்கள் உங்களுடைய வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படுவதால் மன அழுத்தம் ஏற்படும். அதைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. ஏப்ரல் 14 ஆம் தேதியில் இருந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம் ரீதியாக அனைத்துவித நன்மைகளும் ஏற்படும்.
காத்திருக்கும் அதிர்ஷ்டம்
பெற்றோர், பெரியோரின் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுடன் மன வருத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புதிய அறிமுகத்தில் கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகள் தேவையில்லாத அழுத்தங்களைத் தருவார்கள். யோக பலன், சந்தோஷம், அனுகூலம், ஏற்றத்தை அதிகளவில் பெறும் காலகட்டம். பண வரவில் தடைகள் ஏற்படும். ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு அந்த நிலைமை மாறும்.
மாற்றங்கள்
நிறைய மாற்றங்கள் ஏற்படும். தொந்தரவுகள், பாதிப்புகள் இருக்கும். எல்லா விஷயங்களிலும் தடை ஏற்படும். பெட்ரோல் கிடைக்காது. அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தான தர்மங்களை செய்வது நல்லது. விபத்துக்குள்ளாவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களை நம்பி பணம் கொடுக்காமல் இருப்பது நல்லது.
வழிபாடு
எந்த விஷயத்தை சரியென்று நினைத்தீர்களோ அந்த விஷயம் தவறு என புரிந்து கொள்ளும் நேரம். அரசியல்வாதிகள் பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும். சந்தோஷம் ரீதியாக 60 சதவீத நன்மைகளும், பொருளாதாரம் ரீதியாக 70 சதவீதமும் நன்மைகள் உண்டாகும். சுவாமி மலை முருகப் பெருமான் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Rasi Palan This Week: மேஷம் ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்.. முழு பலன்கள் விவரம் இதோ -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
தமிழ் புத்தாண்டு பலன்: கும்ப ராசிக்கு கடன் வாங்குவதால் வரும் அதிர்ஷ்டம்.. பகையும் வரும் கவனம் -
Tamil Puthandu Rasi Palan: மீனம் ராசிக்கு கோடிகளை குவிக்கும் நேரம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம் -
தமிழ் புத்தாண்டு பலன்: பெண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 4 ராசியினருக்கு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்











Click it and Unblock the Notifications