Kadagam Rasi Palan: கடக ராசிக்கு செப்டம்பரில் வரப்போகும் அதிர்ஷ்டம்.. இனி உங்க காட்டுல மழை தான்
செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகத்தில் இருக்கும் 9 கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு கிரகங்களின் முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி அற்புதமான மாதமாக இருக்கும். 2 ஆம் அதிபதியான சூரியன் மாதத்தின் முதல் 15 நாட்களில் 2 ஆம் இடத்தில் இருப்பார். பின்னர் 3 ஆம் இடத்துக்கு வருவார். 12 ஆம் இடத்தில் இருந்த குரு, சுக்கிரன் அமைப்புகள் மாறிவிடும். மாத ஆரம்பத்தில் ராசியிலேயே சுக்கிரன் இருப்பது ராசியை சுபத்துவப்படுத்தும்.
குரு பார்வை
செவ்வாய் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குப் பிறகு குருவின் பார்வையில் இருந்து 10 ஆம் இடத்தைப் பார்க்கிறார். செப்டம்பர் மாத முதல் 15 நாட்கள் வியாபாரம், வேலை, தொழிலில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் மாதத்தின் பிற்பகுதியில் அட்டகாசமான நல்ல அமைப்புகள் ஏற்படும். வேலையில் இருந்து வேறு வேலைக்கு மாறுவது, புதிய தொழில் தொடங்குவது போன்றவற்றிற்கு அற்புதமான நேரமாக இருக்கும்.
தொழிலில் முன்னேற்றம்
15 ஆம் தேதிக்குப் பிறகு எல்லாவற்றையும் தைரியமாக செய்யலாம். 45 நாட்களுக்கு 10 ஆம் இடத்தைப் பார்க்கக்கூடிய நிலையில் உங்கள் ராஜயோகாதிபதியான செவ்வாய் 4 ஆம் இடத்திற்கு வருகிறார். குருவின் பார்வையிலும் இருக்கிறார். அதனால், தொழில் ரீதியிலான முடிவுகள் அனைத்தும் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் அனைத்தும் நீங்கும்.
மாற்றங்கள்
வியாபாரம், தொழில், வேலை, விவசாயம், படிப்பு போன்ற அனைத்து விஷயங்களிலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். 10 ஆம் இடத்தை 9 ஆம் அதிபதி பார்வை பெற்று ஜீவனாதிபதி பார்ப்பதால் தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். 2, 8 இல் ராகு இருப்பதால் சிறு சிறு பாதிப்புகளைச் சந்தித்து வந்திருந்த நிலையில், இனி அந்த நிலை மாறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
காதல் அமைப்பு
காதல் தோல்வி அடைந்து பெரிய பாதிப்புகளைச் சந்தித்தவர்களுக்கு இனி நல்ல காலகட்டமாக இருக்கும். சிலருக்கு புதிய காதல் வருவதற்கான வாய்ப்புள்ளது.
உயர்ந்த சிந்தனைகள் வரும் யோகமான மாதமாக இருக்கும். 12 இல் குரு இருப்பதால் செலவுகளும் ஓரளவு இருக்கும். அவை அனைத்தும் இந்த அக்டோபர் மாதத்தில் மாறும் அமைப்புள்ளது.
குரு, சுக்கிரன்
இதுவரை பட்டு வந்த அனைத்து துன்பங்களுக்கும் விடிவு காலம் கிடைக்கும். குருவும், சுக்கிரனும் 8 ஆம் இடத்தை சேர்ந்து பார்ப்பதால் சிலருக்கு பங்குச் சந்தை கைகொடுக்கும். கடந்த காலத்தில் அஷ்டமத்தில் சேர்ந்து வைத்த பணத்தை இழந்தவர்களுக்கு பணம் திரும்பி யோகம் யோகமான மாதமாக இந்த மாதம் அமையும். மாற்றமும், முன்னேற்றமும் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
-
விருச்சிக ராசிக்கு யோகத்தை தரும் உச்சகுரு.. இந்த ஜூனில் வரப்போகும் பெரிய முன்னேற்றம் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications