Rasi Palan This Week: கடக ராசியினரே 2 லட்டு தின்ன ஆசையா.. அதிர்ஷ்டமும் ஆபத்தும் சேர்ந்து வருது கவனம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

அம்மனுக்கு விஷேசமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kadagam-weekly-rasi-palan-what-kind-of-benefits-cancer-kadagam-people-will-get-from-july-28-to-au

அந்த வகையில், ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது நல்லது. நரம்பு, கால் தொடர்பான விஷயங்களில் அதீத கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது அதீத கவனம் தேவை. மேலதிகாரிகள் விஷயத்தில் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. புதன்கிழமை தோறும் மதிய வேளைகளில் ஏழைகளுக்கு அன்னதானம் அளிப்பது ஏற்றத்தையும், வளர்ச்சியையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

சிக்கலில் சிக்கும் வாய்ப்பு

சட்டத்திற்குப் பிறம்பான விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதுதொடர்பான நபர்களுடன் சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது. மேலதிகாரிகளிடம் தர்க்கம் செய்வது, வாக்குவாதம் செய்வது தவிர்ப்பது நல்லது. அரசுத் துறையில் இருப்பவர்கள், அரசியலில் இருப்பவர்கள் செய்யாத தவறுகளில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளதால் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கவனம் கவனம்

பயணங்கள், குடும்பம், வெளியிடம், கையெழுத்துப் போடுவது, நண்பர்கள், உறவினர்கள் என அனைத்து விஷயங்களிலும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. சனிக்கிழமை தோறும் பெருமாள், தாயார், ஆஞ்சநேயர் வழிபாடு சகலவிதமான நன்மைகளையும் ஏற்படுத்தும். பசுநெய் கொடுத்து வழிபடுவது நன்மையையும், மகிழ்ச்சியையும் ஏற்படும்.

தொட்டதெல்லாம் வெற்றி

எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தடைகள் அனைத்தும் பனி போல நீங்கிச் செல்லும். உத்தியோகம், தொழில், படிப்பு, வியாபாரத்தில், படிப்பில் நீண்ட நாட்களாக இருந்த தடைகள் நீங்கும். மேலதிகாரிகள் மன அழுத்தத்துக்கு ஆளாகி உங்களுக்கு சிறு சிறு குடைச்சலைக் கொடுக்கும் சூழல் ஏற்படும். தொழிலில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். ஏற்றத்தின் அமைப்பு பன்மடங்காக உயரும்.

கையெழுத்து விஷயத்தில் எச்சரிக்கை

அனுமன் சாலிஷா, ஆதித்ய ஹிருதயம் படிப்பது, கேட்பது நன்மையைத் தரும். எந்த விஷயத்தில் கையெழுத்திட்டாலும் அதை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பது நன்மையை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. புதிய விஷயங்களை செய்யும்போது அதுகுறித்து நீண்ட ஆராய்ச்சி செய்துவிட்டு செய்வது பாதிப்புகளில் இருந்து காக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+