கொரோனா லாக் டவுனில் பணப்பிரச்சினை தீராத கடன் தொல்லை தீர பரிகாரங்கள்
கொரோனா வைரஸ் லாக்டவுன் காலத்தில் செலவுக்கு பணமில்லாமல் பலரும் கடன் வாங்கி செலவு செய்து வருகின்றனர். சிலரோ லோன் வாங்கிய திருப்பி செலுத்த பணமில்லாமல் தவிக்கின்றனர். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்க
சென்னை: கடன் பிரச்சினை சிலருக்கு கழுத்தை நெரிக்கும். கொரோனா லாக் டவுன் காலத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியலையே என்று பதறிப்போய் தற்கொலை முடிவை எடுத்து விடுவார்கள். வேலையில்லை, வருமானமில்லை, கடன் பிரச்சினை நாலாதிசையிலும் வாட்டி வதைக்குதே என்று தவிக்கிறீர்களா? மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் சில பரிகாரங்களை செய்தால் போதும் தீராத கடனும் வாட்டி வதைக்கும் நோய்களும் தீரும்.
ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாம் இடம் ருண ரோக சத்ரு ஸ்தானம். கடன், நோய், எதிரிகளை குறிக்கும் இடம் ஆறம் வீடு. இந்த வீட்டில் வந்து அமரும் கிரகங்களைப் பொறுத்து நமக்கு நோய்கள் வரும் அதே போல கடன் பிரச்சினையும் வரும். ஒருவர் வேண்டாம் என்று சொன்னால் கூட தேடி வந்து கடன் கொடுத்து விட்டு போவார்கள்.
ஆறாம் வீட்டில் சூரியன் இருந்தால் அரசு தொடர்பான வங்கிக் கடன்கள் வாங்குவீர்கள். சந்திரன் இருந்தால் கடன்பட்டாலும் சீக்கிரம் அடையும், செவ்வாய் இருந்து வீடு நிலம் வாங்க கடன் வாங்குவீர்கள், குரு இருந்தால் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதில் தாமதம் ஏற்படும். சுக்கிரன் இருந்தால் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை வரலாம். சனி இருந்தால் பூமி தொடர்பான பிரச்சினையும் அதனால் கடனும் வரலாம். ராகு கேது இருந்தால் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினையும் கடன்களும் வரலாம்.

மேஷம் விருச்சிகம்
செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்கள், பெருமாள் கோவிலுக்கு போய் துளசியை அர்ச்சனை செய்ய கொடுக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கலாம். புதன் ஹோரையில் கடன் அடைக்கலாம். செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் ஸ்கந்த குரு கவசம் படிக்கலாம். செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரை, வியாழக்கிழமை குரு ஹோரையில் கடன்களை அடைக்கலாம்.

ரிஷபம் துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் மகாலட்சுமி பூஜை செய்யலாம். வெள்ளிக்கிழமைகளில் மல்லிகைப்பூவை மகாலட்சுமி படத்திற்கு போட்டு கனகதாரா ஸ்தோஸ்திரம் படிக்கலாம். சுக்கிரன் ஹோரையில் கடன்களை அடைத்து வர கடன் பிரச்சினை தீரும். துலாம் ராசிக்காரர்கள் தாமரை மலரை மகாலட்சுமிக்கு சமர்ப்பிக்கலாம் சுக்கிரன், குரு ஹோரையில் கடன்களை அடைக்கலாம்.

மிதுனம் கன்னி
மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் புதன் மற்றும் சுக்கிரன் ஹோரையில் கடன்களை அடைக்கலாம். செவ்வாய் ஹோரையில் செவ்வரளி பூக்களை முருகனுக்கு அர்ச்சனை செய்து கந்த சஷ்டி கவசம் படிக்க கடன்கள் அடையும். கன்னி ராசிக்காரர்கள் பைரவர் வழிபாடு செய்யலாம். புதன்,குரு, சுக்கிர ஹோரையில் கடன்களை அடைக்கலாம்.

கடகம், சிம்மம்
கடக ராசிக்காரர்கள் குரு ஹோரையில் கடன்களை அடைக்கலாம். சிவபெருமானுக்கு மஞ்சள் அரளி பூக்களை அர்ச்சனை செய்ய பயன்படுத்தலாம். சிம்ம ராசிக்காரர்கள் அருகம்புல்லை விநாயகருக்கு அர்ச்சனை செய்ய கொடுத்து சூரியன் செவ்வாய் ஹோரையில் கடன்களை அடைக்கலாம்.

மகரம் கும்பம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு கடன் அடைக்க ஏற்ற ஹோரை புதன், சுக்கிரன். குரு ஹோரையில் கடன்களை அடைக்கலாம். இவர்கள் வாராஹி அன்னையை வழிபட கடன்கள் தீரும். அபிராமி அந்தாதி கூறி அம்மனை வழிபடலாம். வெள்ளிக்கிழமைகளில் பஞ்சமுக தீபம் ஏற்றி வணங்கலாம்.

தனுசு மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு மீனம் ராசிக்காரர்கள் குரு மற்றும் சுக்கிரன் ஹோரையில் அம்மனுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம் செய்யலாம். முருகனுக்கு மஞ்சள் நிற பூக்களை சாற்றி வழிபடலாம். செவ்வாய் மற்றும் குரு ஹோரையில் கடன்களை அடைக்க ஆரம்பிக்கலாம். பறவைகளுக்கு உணவு கொடுக்கலாம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications