Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னி ராசிக்கு கடன் பிரச்சனை ஓவர்.. அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. சூப்பர் சான்ஸ் வரப்போகுது

Subscribe to Oneindia Tamil

ஆவணி மாத பலன்கள்: அம்மனுக்குரிய விசேஷ மாதமான ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கப் போகிறது. இந்த ஆவணி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஆவணி மாத கிரக நிலை

எல்லா விதமான சுப காரியங்களை செய்யவும் மக்கள் காத்துக் கொண்டிருக்கும் மாதமாகும். ஆவணி மாதம் என்பது சூரிய மாதம். சூரியனுடைய வீடான சிம்மத்திற்கே சூரியன் வரக்கூடிய மாதம் தான் ஆவணி. கார்காலம், சிம்ம மாதம் என்று ஆவணி மாதம் அழைக்கப்படும். ஏற்கனவே சிம்மத்தில் கேது இருக்கிறார். 7 ஆம் இடத்தில் ராகு, 8 இல் சனி, 11 இல் குரு அமர்ந்திருக்கின்றனர். இந்த ஆவணி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

kanni-rasi-palan-what-kind-of-benefits-will-get-kanni-rasi-people-during-the-month-of-aavani

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு விரையங்கள் அதிக அளவில் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் சாப்பாடு தானமாக கொடுப்பது வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் மிகுந்த ஏற்றம் உண்டாகும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கடன்களை அடைத்து முடிப்பதற்கான அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள்.

மகிழ்ச்சி

கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளியிடத்திலும் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் இருந்த பாதிப்புகளில் இருந்து பரிபூரண நிவர்த்தி உண்டாகும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் உண்டாகும். உள்ளூர், வெளியூர் என எந்த பயணங்கள் வந்தாலும் எடுத்துக் கொள்வது.

கவனம்

குடும்பத்தில் மட்டும் அதீத கவனமாக இருக்க வேண்டும். துணையிடம் எந்தவிதமான சண்டை, சச்சரவுகளிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் மிகுந்த பாதிப்புகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். ஆரோக்கியத்திலும், மன அழுத்தம் தொடர்பான விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது.

பாதிப்புகள் நீங்கும்

பூர்வீகம் தொடர்பான விஷயங்களில் இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகம். ஆவணி மாதத்தில் விடுபட்ட தெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள். அலர்ஜி ஒவ்வாமை, ஜாயிண்டுகளில் வழி வருவதற்கான வாய்ப்புள்ளது. தோல் வியாதிகளால் பாதிப்பு வரும் என்பதால் கவனமகா இருப்பது நல்லது. முருகன் வழிபாடு மிகப்பெரிய நம்பிக்கையை உங்களுக்கு ஏற்படுத்தும். சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது நல்ல மாற்றத்தை தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+