Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு பிரகாசமான பிப்ரவரி மாதம்.. ஆரோக்கியத்தில் ரொம்ப கவனம்
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியினருக்கு அதிபதியான புதன் பகவான் 6 ஆம் இடத்தில் அமர்கிறார். உடன் ராகுவும் அமர்ந்திருக்கிறார். நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல கடனுதவிகள் கிடைக்கும். வேலை கிடைப்பதைவிட அதிக எதிர்பார்ப்புகளுடன் நீங்கள் இருப்பீர்கள். அதிக எதிர்பார்ப்பில்லாமல் கிடைக்கும் வேலையை செய்வது நன்மை பயக்கும். உடம்பில் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
ஆரோக்கியம்
உங்களுக்கு அல்லது உங்கள் துணைக்கு ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். ஏற்கனவே குடும்பத்தில் சில குழப்பங்கள், கணவன், மனைவிக்கிடையே பிரச்சனைகள் இருக்கும். இப்போது அதனுடன் சேர்ந்து ஆரோக்கியமும் குறைபாடு ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. சாப்பிடும் விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை.
குழந்தை பாக்கியம்
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல குழந்தை பாக்கியம் உண்டாகும். இந்த மாதத்தில் சஷ்டி விரதம் இருப்பது அற்புதமான பலன்களைக் கொடுக்கும். 5 ஆம் இடத்தில் சூரியன், சுக்கிரன் செவ்வாய் இருப்பதால் காதல் முயற்சிகள் வெற்றி பெறும். புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். பெண்கள் நிறைய பேர் தொழில் தொடங்குவீர்கள்.
தொழில்
குழந்தை பிறக்கும் யோகம் உண்டு. செயற்கை முறையில் கருத்தரிக்கும் யோகம் உண்டு. 10 இல் குரு இருப்பதால் வேலை பார்க்கும் இடத்தில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்படும். தொழில் செய்பவர்களுக்கு நிதி சார்ந்த சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். 12 இல் கேது விரயத்தில் இருப்பதால் கழிவு உறுப்புகளில், மறைவு உறுப்புகளில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.
வழிபாடு
மாணவர்களுக்கு முன்னேற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும். உயர்கல்வி தொடர்பான நல்ல தெளிவு ஏற்படும். யோகமான மாதமாக இருக்கும். அதிர்ஷ்டங்கள் பெறும் காலகட்டமாக இருக்கும். பழமுதிர்ச்சோலை முருகரை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். தினந்தோறும் அருகில் உள்ள முருகன் கோயில்களில் நெய் தீபமேற்றுவது ஏற்றத்தைத் தரும்.
-
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
2026 குருப்பெயர்ச்சி: குரு பகவானின் அருளால் மீன ராசிக்கு வாழ்க்கை மாறப் போகிறது! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications