வார ராசி பலன்: கன்னி ராசிக்கு லாபம் கொட்டும்.. எல்லாமே இனி ஜெயம் தான்
Kanni Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கிரக நிலைகள்
புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் நிறைவடைந்து பிப்ரவரி 13 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. சூரியன் கும்பத்திற்கு பிரவேஷம் ஆகிறார். சூரியன், புதன், சுக்கிரன், ராகு, திரிகோணத்தில் குரு வக்கிரமாக அமர்கிறார். இந்த 4 கிரகங்கள் சேருவது நல்லது இல்லை. அதுவும், புதனும் ராகுவும், சுக்கிரனும் ராகுவும், சூரியனும் ராகுவும் சேருவது மோசமான நிலையாகும். இப்போது 4 கிரகங்களும் சேருவது பொதுவாக நன்மையைத் தராது. சனியின் வீட்டில் 4 கிரகங்கள் இருந்தாலும் குருவின் பார்வை பலத்தால் இருப்பதால் சிறு சிறு பிரச்சனைகள் நீங்கும்.
இந்த வார ராசி பலன்
சிங்கப்பூர், சிவகங்கை, தேவக்கோட்டை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கோயில்களில் தீ விபத்து, அசம்பாவிதங்கள், சிலிண்டர் வெடிப்பது, அரசியல் கட்டடங்களில் தாக்குதல், விமான விபத்து போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கலை உலகம் சார்ந்த நபரின் உயிரிழப்பு ஏற்படும். இந்த வாரத்தில் மகரம், ரிஷபம், கன்னி ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)
கன்னி ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பெரிய வெற்றிகள், லாபம் கிடைக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். அபரிமிதமான லாபம் கிடைக்கும். பெரிய லாபம், பெரிய வெற்றிகள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் நடக்கும் யோகமான நேரம். அமோகமான வாய்ப்புகள் தேடி வரும். மன நிம்மதி கிடைக்கும். 6 ஆம் இடத்தில் இத்தனை கிரகங்கள் இருப்பது திட்டமிட்டுச் செய்யும் காரியங்களில் ஏற்றம் உண்டாகும்.
தொட்டது துலங்கும்
சுக்கிரன், சூரியன், ராகு, புதன் நல்ல நிலையில் இருப்பதால் எல்லாவற்றிலும் ஜெயிக்கும் யோகம் உண்டாகும். 6, 11க்கு உரிய இடங்களில் கிரகங்கள் இந்த நிலையில் இருப்பது நல்ல முன்னேற்றத்தை ஏற்படும். பெரிய ஆட்களின் தொடர்பு, அவர்கள் மூலமாக நன்மைகள் நடக்கும் யோகம் உண்டாகும். சந்தோஷம் ரீதியாக 70 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீதமும் நன்றாக இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
ஆரோக்கியம்
ரத்த அழுத்தம், சர்க்கரை, வயிறு, கழிவுப் பாதை தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. பெருமாள் வழிபாடு, தாயார் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். அரசு காரியங்கள், மற்ற விஷயங்களில் நன்மைகள் உண்டாகும். உணர்ச்சிவசப்பட்டு பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. பொறுமையை கடைப்பிடிப்பது ஏற்றத்தைத் தரும்.
அனுகூலம்
ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. மேலதிகாரிகளிடம் தர்க்கம், வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மேலதிகாரிகள், பதவி உயர்வு தொடர்பான விஷயங்களில் நல்லது நடக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம், தொழில், படிப்பு, உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications