செவிசாய்க்காத ராகுல்.. சோனியா கைக்கு போன கடிதம்.. டெல்லியில் நவம்பர் 1 பேரணி அதிரடி ரத்து? பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நவம்பர் 1ம் தேதி டெல்லியில் 'இந்தியா' கூட்டணி கட்சியினர் பேரணி அறிவித்துள்ளனர். இந்த பேரணிக்கு டெல்லி வர்த்தகர் சங்கம் திடீரென்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த பேரணியால் 20 மார்க்கெட்டுகளில் தீபாவளி வர்த்தகம் பாதிக்கப்படும் எனவே ஒத்திவைக்க வேண்டும் என்று டெல்லி வர்த்தகம் மற்றும் தொழில் சபையினர் ராகுல் காந்திக்கு 3 கடிதம் எழுதினர். அவர் கண்டுக்கொள்ளாத நிலையில் சோனியா காந்திக்கு கடிதம் பறந்துள்ளது. இதனால் திட்டமிட்டப்படி நவம்பர் 1ல் டெல்லியில் 'இந்தியா' கூட்டணி பேரணி நடக்குமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வைத்தல் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக 'இந்தியா' கூட்டணி தனது போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. நவம்பர் 1ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் ராகுல் காந்தி தலைமையில் 'இந்தியா' கூட்டணி கட்சியினர் பேரணி அறிவித்துள்ளனர்.

india bloc

இந்த பேரணிக்கு டெல்லி வர்த்தகம் மற்றுமு் தொழில் சபையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தீபாவளி நெருங்குவதால் 'நவம்பர் 1ம் தேதி ராம்லீலா மைதானத்தில் பேரணியை ஒத்திவைக்க வேண்டும். இந்த பேரணி நடந்தால் சுமார் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்று ராகுல் காந்திக்கு கடிதம் எழுதப்பட்டது

ராகுல் காந்திக்கு 3 முறை கடிதம் எழுதியும் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை. நவம்பர் 1ல் பேரணி நடத்துவதில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார். இதற்கிடையே தான் டெல்லி வர்த்தகம் மற்றும் தொழில் சேம்பர் சார்பில் சோனியா காந்திக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதில், ''நவம்பர் 1ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் 'இந்தியா' கூட்டணி பேரணி அறிவித்துள்ளது. தீபாவளி நேரம் என்பதால் வர்த்தகர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். டெல்லியில் உள்ள 20 மார்க்கெட்டுகளில் சுமார் 10 ஆயிரம் கோடி முதல் 12 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும். இதனால் 'இந்தியா' கூட்டணி பேரணியை தீபாவளிக்கு பிறகு மாற்றி வைக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் 'இந்தியா' கூட்டணியின் நவம்பர் 1ம் தேதி பேரணி ரத்தாகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ராகுல் காந்தி உள்பட பிற காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டப்படி நவம்பர் 1ம் தேதி பேரணியை ராம்லீலா மைதானத்தில் நடத்துவதில் உறுதியாக உள்ளனர். இதனால் தான் டெல்லி வர்த்தகம் மற்றும் தொழில் சேம்பர் கோரிக்கையை ஏற்கவில்லை. ஆனால் சோனியா காந்தி அப்படி கிடையாது. அவர் யோசித்து அனைவரின் நலனையும் மனதில் வைத்து இணக்கமாக செயல்பட்டு முடிவெடுப்பவர்.

இதனை பலமுறை அவர் நிரூபித்துள்ளார். சோனியா காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் கடுமையான செயல்பாடுகளில் எடுத்தது இல்லை. ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் எச்சரிக்கையாகவும், கட்சிக்கு சாதகமான அணுகுமுறையை மனதில் வைத்தும் எடுப்பார்.

தற்போது சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து மெல்ல மெல்ல விலகி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியிடம் தனது பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார். இருப்பினும் டெல்லி வணிகர்களை பொறுத்தவரை, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுப்பார் என நம்புகின்றனர்.
இதனால் தான் டெல்லி வர்த்தகம் மற்றும் தொழில் சேம்பர் சார்பில் சோனியா காந்திக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+