Kanni: கன்னி ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் அதிர்ஷ்டம்.. பாக்கியங்கள் கொட்டப் போகுது
மார்ச் மாத பலன்கள்: பிப்ரவரி மாதம் நிறைவடைந்து மார்ச் மாதம் பிறந்துள்ளது. மார்ச் மாதத்தில் சந்திரகிரகணம் நேற்று நிறைவடைந்துள்ளது. மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. முக்கிய கிரகங்களின் மாற்றம் நடைபெறும் நிலையில், இந்த மார்ச் மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
மார்ச் மாதம் ஆரம்பிக்கும்போதே சுக்கிரன் தனது உச்ச வீடான சிம்மத்தில் அமரப்போகிறார். உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுகங்களையும், செளபாக்கியங்களையும் தரக்கூடிய மாதமாக இருக்கும். 13 ஆம் தேதிக்குப் பிறகு குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடையவுள்ளார். 22 ஆம் தேதி செவ்வாயும் அமருகிறார். 14 ஆம் தேதி சூரியன் சனியோடு இணைந்து மீனத்தை நோக்கி பயணிக்கப் போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன், சனி, செவ்வாய் இணைவுகள் நிகழப் போகிறது.

5 ஆம் வீட்டில் கேது, 11 ஆம் வீட்டில் ராகு இருக்கிறார். இந்த கிரக நிலைகளின் அடிப்படையில் இந்த மாதம் பிறக்கிறது. சந்திரன் தன்னுடைய பயணத்தை தனது சொந்த வீடான கடகத்தில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசியினருக்கு புதன் பகவான் 6 ஆம் இடத்தில் விரயாய அதிபதியுடனும், செவ்வாய் பகவானுடன் சேர்ந்து அமர்ந்துள்ளது. 6 என்பது எதிர்ப்பு, பகை, நோய். எதிர்மறையான விஷயங்களுக்குள் செல்லாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. கோபம், ஆக்ரோஷம் ஏற்படும். இருப்பினும் குருவின் பார்வை இருப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.
பணவரவு
வேலை இல்லாத கன்னி ராசியினருக்கு மார்ச் மாதம் வேலை அமையும். லக்கினாதிபதி 6 இல் மறைந்துள்ளதால் சொந்த ஊரில் இருந்து வெளியில் செல்லக்கூடிய அமைப்பு ஏற்படும். பிறந்த ஊரைவிட்டு வெளியில் சென்று பிழைக்கும் யோகம் உண்டாகும். அந்த இடத்தில் நல்ல வளர்ச்சியைப் பெறுவீர்கள். எதிர்ப்பு, பகைக்குள் செல்லாமல் இருப்பது நல்லது. பணம் சார்ந்த விஷயத்தில் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாது. பண வரவு உண்டாகும்.
பிரச்சனை தீரும்
சுக்கிரன் வலிமையாக 7 ஆம் இடத்தை பார்ப்பதால் பணம் உங்களைத் தேடி வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 10 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான் மார்ச் 11 ஆம் தேதி வக்கிர நிவர்த்தி அடைவதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும் காலகட்டமாக இருக்கும். சிறிய சிறிய சண்டைகளால் பிரிந்த கணவன், மனைவி மீண்டும் சேரக்கூடிய அமைப்பு உள்ளது.
குரு பார்வை
பொருளாதாரம், பேச்சு நன்றாக இருக்கும். பேச்சினால் பிழைக்கும் தொழில்களில் அற்புதமான முன்னேற்றம் உண்டாகும். 3 ஆம் அதிபதி செவ்வாய் 6 இல் குருவின் பார்வையில் அமர்ந்திருக்கிறது. இந்த அமைப்பு கன்ன ராசிக்கு இலக்கை அடையும் அமைப்பை ஏற்படுத்தும். கட்டடம், நிலம் சார்ந்த விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மனம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும்.
சொத்துகள் வாங்கும் யோகம்
இடம், நிலம், வீடு, வண்டி, வாகனம், சொத்துகள் வாங்கக்கூடிய யோகங்கள் உண்டாகும். குரு பகவான் சுகத்தை தரக்கூடியவர். 10 ஆம் இடத்தில் அமரும் குரு வக்கிர நிவர்த்தி அடைந்து 4 ஆம் வீட்டை பார்ப்பதால் தாய் சார்ந்த விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். தாயின் சொத்துகள் கிடைக்கும். இடம், நிலம் சார்ந்த பிரச்சனைகள் தீரும். விற்காத நிலம் விற்பதற்கான யோகம் உண்டாகும்.
ஆசை நிறைவேறும்
வீட்டுக்கு காரக கிரகமான சுக்கிரன் உச்ச பலமடையக் கூடிய மாதம் என்பதால் வீட்டை புனரமைப்பீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் சுபகாரியங்களைச் செய்து மகிழ்வீர்கள். ஆசைப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். இருசக்கர வாகனம், கார் வாங்குவதற்கான யோகம் ஏற்படும். காதல் சார்ந்த விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள், காதல் திருமண யோகம் உண்டாகும். காதல் மலரும்.கணவன், மனைவி, உறவுக்குள் அன்பு, பாசம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications