Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு கால்வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி.. ஒரு விஷயத்தில் மட்டும் ரொம்ப கவனம்
செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. அந்த வகையில், செப்டம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், ஒரு சில ராசியினருக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய் மற்றும் சூரியன் ஆகிய 4 கிரகங்களும் தங்கள் நிலையை அடுத்தடுத்து மாற்றுகின்றன.

செப்டம்பர் 13 ஆம் தேதி துலாம் ராசியில் செவ்வாய் பெயர்ச்சியாகிறார். செப்டம்பர் 14-ஆம் தேதி சிம்ம ராசியில் சுக்கிரனுன் பெயர்ச்சியாகி புதனுடன் இணைகிறார். இந்த இரண்டு கிரகங்களும் லட்சுமி நாராயண யோகத்தை உண்டாக்குகின்றன. செப்டம்பர் 15 ஆம் தேதி கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்களும் நிகழ்கின்றனர். செப்டம்பர் மாதம் நிகழும் இந்த கிரக மாற்றங்களால் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு கொடுத்த வாக்கை வீட்டிலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சந்தோஷமான அமைப்பு உண்டாகும். ரத்த பந்த உறவுகள், தாய் வழி உறவுகள் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். அதற்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும்.
முயற்சிகளில் வெற்றி
புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு, அனுகூலம் ஏற்படும். உத்தியோகம் சார்ந்து எந்த பயணங்கள் வந்தாலும் அதனை எடுத்துக் கொள்வது நல்லது. இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் என மாற்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நன்மை பயக்கும். எந்த மாற்றங்கள் வந்தாலும் அது பெரியளவிலான நன்மைகளைத் தரும்.
பெரிய முதலீடுகள் உங்களுக்கு கிடைக்கும் காலகட்டமாக இந்த செப்டம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டம் இருக்கும். தொழில் ரீதியாக அனைத்து விஷயங்களையும் ஜெயிக்கும் அமைப்பு உண்டாகும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளை செய்து மகிழ்வீர்கள். சுவாமியை மன நிம்மதியோடு தரிசித்து விட்டு வரும் வாய்ப்புகள் ஏற்படும்.
புதிய வேலை
புதிய வேலைகள் கிடைக்கும். ஏற்கனவே உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம் ஏற்பட்டாலும் கவலை கொள்ளத் தேவையில்லை. அற்புதமான வேலையாக இருக்கும். சிலருக்கு கடன் வாங்கும் சூழல் உள்ளது. 6 ஆம் இடத்தை குரு, சுக்கிரன் பார்ப்பதால் நல்ல கடன் வாங்கக்கூடிய அமைப்பு உள்ளது. அந்நிய மதம், இனம், மொழி பேசக்கூடியவர் மூலமாக ஆதரவுகள், ஆதாயங்கள், பண வரவுகள் கிடைக்கும்.
அனைத்து விஷயங்களையும் சமாளிக்கக்கூடிய நல்ல மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமையும். ஏற்றமும், வளர்ச்சியும் கொடுக்கும் காலகட்டமாக அமையும். பண வரவிற்குப் பிரச்சனை இருக்காது. பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். வார்த்தைகளில் மட்டும் கவனம் தேவை. கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.
ஆரோக்கியம்
காது, மூக்கு, தொண்டை, அலர்ஜி, விட்டமின் குறைபாடு போன்ற விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு திடீரென தலைச்சுற்றல், மயக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மருந்து, மாத்திரைகளை கைகளிலேயே வைத்துக் கொள்வது நல்லது. பெருமாள் வழிபாடு உங்களுக்கு மாற்றத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications