Rasi Palan This Week: ஜாவா சுந்தரேஷனாக மாறும் கன்னி ராசி.. துணையிடம் பேச்சில் மட்டும் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

அந்த வகையில், ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு லாபம், சந்தோஷம் ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். தொழில் ரீதியாக இருந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். இடமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம் என அனைத்துவிதமான மாற்றமும் உண்டாகும். வேலையில் இருப்பவர்கள் தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். எடுத்த காரியங்களில் இருந்து வந்த சிக்கல்கள், தடைகள், பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும்.
தடைகள் நீங்கும்
பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். சிறு சிறு தடைகள் வந்தாலும் விரைவில் அந்த தடைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். அலர்ஜி, கால்சியம் தொடர்பான பிரச்சனை, கை வலி, கால் வலி என அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை உண்டாகும். கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலையிலும், மனைவியாக இருந்தால் கணவனின் உடல்நிலையிலும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
ஆதாயம்
குடும்பத்தாருடன் தெய்வ வழிபாட்டுக்குச் செல்வது நன்மை, முன்னேற்றத்தை ஏற்படுத்தும். முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் இருக்காது. உத்தியோகத்தில் நன்மைகள் ஏற்படும். தொழில் தொடங்குவதற்கான அற்புதமான காலகட்டமாக இருக்கும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் கிடைக்கும். சமுதாயத்திலும், வீட்டிலும் உங்களுக்கான மதிப்புகள், மரியாதை அதிகரிக்கும்.
வெற்றிகள் குவியும்
ராகுவின் அனுகூலம் அனைத்து விதத்திலும் கிடைக்கும். அதன் மூலம் வெற்றிகள் குவியும். குடும்ப விஷயத்தில் மட்டும் அதீத கவனம் தேவை. தேவையில்லாதவற்றை கணவனிடமும், மனைவியிடமும் பேசுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் பிரச்சனைகளையும் பாதிப்புகளையும் சந்திப்பதற்கான வாய்ப்புள்ளது.
வழிபாடு
விடுபட்ட தெய்வ வழிபாடுகள் உங்களுக்கு ஏற்றத்தையும், நம்பிக்கையையும் உண்டாக்கும். துர்க்கை வழிபாடு செவ்வாய்க்கிழமை செய்வது அபரிமிதமான முன்னேற்றத்தைக் கொடுக்கும். செவ்வாய்க்கிழமை தோறும் தெய்வ வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, கணபதி, துர்கை, முருகன் வழிபாடு நல்ல பலன்களைத் தரும். தெய்வீக கடாட்சமும், அனுகூலமும் ஏற்படும். திடீரென எடுக்கும் முடிவுகளால் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள்.












Click it and Unblock the Notifications