Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரோதி தமிழ் புது வருட ராசி பலன்: தொட்டதெல்லாம் பொன்னாகும்.. யாருக்கு ஜாக்பாட் அடிக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிகழும் மங்களகரமான குரோதி தமிழ் புது வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிறக்கிறது. இந்த ஆண்டின் துவக்கத்திலேயே சுப கிரகமான குரு பகவான் சித்திரை 18ஆம் தேதி ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். சனி பகவான் ஆண்டின் இறுதியில் பங்குனி மாதம் 15ஆம் தேதி மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். ராகு மீன ராசியிலும் கேது கன்னி ராசியிலும் ஆண்டு முழுவதும் பயணம் செய்வார்கள். இந்த கிரகங்களின் பயணத்தினால் பிறந்தவர்களுக்கு இந்த குரோதி புத்தாண்டு என்ன பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

மிதுன ராசிக்காரர்கள்: மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமான ஆண்டாக குரோதி தமிழ் புத்தாண்டு அமைந்துள்ளது. வேலையில் புரமோசன் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். உயரதிகாரிகளுடன் ஒரு நட்பு இருக்கும். வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணம் சுப காரியம் நடைபெறும். குரோதி தமிழ் புத்தாண்டில் சித்திரை மாதத்திலேயே குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடைந்து 12ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். சனி பகவான் பாக்ய ஸ்தானத்தில் ஆண்டு முழுவதும் பயணம் செய்கிறார். செல்வ செழிப்பு அதிகரிக்கும் ஆண்டாக குரோதி ஆண்டு அமைந்துள்ளது.

Krodhi Tamil puthuvaruda palan for Mithunam Rasi

குரு பெயர்ச்சி பலன்: குரு பகவான் சித்திரை மாதத்தில் இடப்பெயர்ச்சி அடைகிறார் மே 1ஆம் முதல் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வந்து அமரப்போகிறார். குருவினால் உங்களுக்கு விரையம் அதிகரிக்கும் சுப விரையமாக மாற்றுங்கள். மருத்துவ செலவுகளுக்காக பண விரையம் அதிகம் ஏற்படும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். குரு அமர்கிற இடம் விரைய ஸ்தானத்தில் என்பதால் நல்லது இல்லை என்பது பொது பலனாக இருந்தாலும், மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி நன்மைதான் செய்யும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.

வெற்றி தரும் குரோதி ஆண்டு: குரு பகவான் உங்கள் ராசிக்கு 7 மற்றும் 10ஆம் இடத்துக்கு அதிபதி அதாவது கேந்திராதிபதி எப்போதும் கெட வேண்டும். உங்கள் இராசிக்கு குரு கெட்டவன். எனவே 12ஆம் வீட்டில் அமரப்போகும் குரு யோகத்தை கொடுப்பார். உடல்நலனில் இருந்த பிரச்னை குணமாகும். நீண்ட நாட்களாக இருந்துக் கொண்டிருந்த வழக்கு சமரசம் ஏற்படும் அல்லது வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கும்.

கடன் பிரச்சினை நீங்கும்: வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீடு வாங்கும் யோகம் குரோதி ஆண்டில் கைகூடி வரப்போகிறது. இதுநாள்வரை கடன் தொல்லையில் இருந்தவர்களுக்கு, வருமானம் அதிகரிக்கும் கடன் பிரச்சினை நீங்கும் காலம் கைகூடி வரப்போகிறது. மாணவர்களுக்கு அற்புதமான மாற்றத்தை தரப்போகிறது. கல்வி கற்பதில் இருந்த தடைகள் நீங்கும். மாணவர்களுக்கு புது முயற்சிகள் கைகூடி வரும். வெளிநாடு வேலைக்கு செல்ல காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.

தோஷம் தீர்க்கும் குரு பார்வை: குருவின் பார்வை 12ஆம் வீட்டில் இருந்து நான்கு, ஆறு, எட்டாம் வீடுகளின் மீது விழுகிறது. சொத்து சுகம் சேர்க்கை ஏற்படும். வீடு வண்டி வாங்கலாம். இது சுப விரைய செலவு என்பதால் பிரச்சினையில்லை. ஆறாம் வீடு ருண ரோக சத்ரு ஸ்தானம் என்பதால் ஒரு கடன் வாங்கி இன்னொரு கடனை அடைக்கலாம். வாட்டி வதைத்த நோய்கள் தீரும் ஆயுள் அதிகரிக்கும். அவமானங்கள் நீங்கும். பெண்களாக இருந்தால் தோஷங்கள் நீங்கும். தாலி பாக்கியம் அதிகரிக்கும்.

சனி தரும் சந்தோஷம்: அஷ்டம சனியால் கடந்த சில ஆண்டுகாலமாகவே பணப்பிரச்சினை, கடன் பிரச்சினையில் சிக்கித் தவித்து வந்த உங்களுடைய பொருளாதார நிலைமை சீரடையப்போகிறது. பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தவர்கள் இனி உங்களைப் புரிந்து கொள்வார்கள். கடன் பிரச்சினையால் சிலர் தற்கொலை வரை சென்று மீண்டிருப்பீர்கள். சனி பகவான் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் கஷ்டங்களில் இருந்து கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை பெறப்போகிறீர்கள்.

சனி தரும் பொற்காலம்: குரோதி ஆண்டு முதல் உங்களுக்கு பொற்காலம் ஆரம்பமாகிறது. பாக்ய சனி நிறைய பதவி உயர்வை தேடித்தரப்போகிறார். கடந்த காலங்களில் வேலையை இழந்தவர்களுக்கு இனி நல்ல வேலை கிடைக்கப்போகிறது. வருமானம் அதிகரிக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் இனி மளமளவென நடைபெறப்போகிறது. திருமணம் கைகூடி வரும். திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கை கூடி வரும். படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

ராஜயோகம் தரும் ராகு கேது: ஏற்கனவே 10ல் ராகு நான்காம் வீட்டில் கேது சஞ்சரிக்கிறார். 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளைஅதிகரிப்பார் ராகு பகவான். வேலையில் இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். மிகப்பெரிய வெற்றிகள் கைகூடி வரப்போகிறது.

மன மகிழ்ச்சி அதிகரிக்கும்: குடும்பத்தில் அமைதியும் சாந்தமும் நிலவும் கணவன், மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பணவரவு அதிகம் உண்டு. குழந்தை இல்லாத தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். வீண் அலைச்சல்கள் நீங்கும். இனி திட்டமிட்டு எதையும் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வருமானத்தை அதிகரிப்பீர்கள். திறமையும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் ஆண்டாக குரோதி தமிழ் புத்தாண்டு அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+