Kumbam Rasi Palan: கும்ப ராசிக்கு சுக்கிரன் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம்.. சனியினால் பாதிப்பும் உண்டு
Purattasi matha palan: ஆவணி மாதம் நிறைவடைந்து பெருமாளுக்கு உரிய மாதமான புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
புரட்டாசி மாதம்
புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. பெருமாள் மாதம், வைணவ மாதம், புண்ணிய மாதம், முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பொழியும் மாதம் என்று அழைக்கப்படுகிறது. மாதங்களில் 6 ஆவது மாதமாக வரக்கூடிய மாதம். சூரிய பகவான் ராசி மண்டலத்தில் 6 ஆவது ராசியாகிய கன்னி ராசியில் அமரும் மாதமே புரட்டாசி மாதம்.

பண்டிகைகள்
பொதுவாக புரட்டாசி மாதம் என்றாலே முதலில் நியாபகத்துக்கு வருவது நவராத்திரி தான். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என ஏகப்பட்ட விசேஷங்கள் வரவுள்ளன. கொழு பொம்மைகளைக் கொண்டு பூமியில் கடவுளை வைத்து மனதிலே ஏற்ற கொண்டாடக்கூடிய மாதமாகும். இந்த மாதத்தில் அம்பாளுக்கு ஏராளமான விசேஷங்கள் கொண்டாடப்படும்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
புரட்டாசி மாதத்தில் முக்கியமான மஹாளய அமாவாசை. நீண்ட நாட்களாக முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்காமல் இருப்பவர்கள் புனித நதிகள், ஆற்றோரங்களில், கடலோரங்களில், குளக்கரைகளில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு ஆசிர்வாதம் பெறும் மாதமாகும். சூரியன் கன்னியில் அமர்ந்துள்ளதால் இந்த மாதத்தில் முன்னோர்களை நினைத்து வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
இந்த புரட்டாசி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு நல்லவை அனைத்தும் நடக்கும் காலகட்டமாக இருக்கும். சுக்கிரன், குரு பகவான் உங்கள் ராசியைப் பார்க்கிறார்கள். அழகும், ஆரோக்கியமும் அதிகரிக்கும். மனதில் இருந்த இனம்புரியாத கவலைகள் விலகும். பணம், மனதைக் கொடுத்து ஏமாந்துவிட்டோம் என்கிற ஆதங்கம் இருக்கும். சுக்கிரன் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அழகு, இளமை அதிகரிக்கும்.
தொட்டது துலங்கும்
முகத்தில் தெரியும் சோர்வு எல்லாம் நீங்கி உற்சகமாக இருப்பீர்கள். யோகாதிபதியான புதன் இந்த மாதம் முழுவதும் பலமாக அமர்ந்திருப்பதால் நிலைமையை சமாளிக்கு தைரியம் வரும். எல்லா வகையிலும் வெற்றியும், சந்தோஷமும் கிடைக்கும். ஏழரைச் சனியில் பாத சனி நடப்பதால் எங்கு சென்றாலும் எதிர்ப்புகள், இழப்புகள் இருக்கும். எந்த விஷயத்தை எடுத்தாலும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய வேண்டியிருக்கும்.
ஆரோக்கியம்
உங்கள் ராசியிலேயே ராகு பகவான் அமர்ந்திருப்பதால் ஆரோக்கியத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அநாவசியமான பேச்சுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உணவுக் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு குரு பகவான் பலமாக இருப்பதால் வியாபாரம் இந்த மாதம் முழுவதும் விறுவிறுப்பாக இருக்கும். புதிதாக வியாபாரம், கடை தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.
வழிபாடு
எடுத்த காரியங்களில் ஜெயிக்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் சிறு சிறு சவால்கள் இருந்தாலும் அதையும் சமாளித்து ஜெயிக்கக் கூடிய யோகம் உண்டாகும். பிள்ளைகளால் எல்லா வகையிலும் நன்மை நடக்கும். மகளுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும் யோகம் உண்டாகும். ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும். மூட்டை தூக்கும் ஏழை தொழிலாளர்களுக்கு உதவி செய்வது, வேர்க்கடலை தானமாகக் கொடுப்பது அற்புதத்தை ஏற்படுத்தும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications