Rasi Palan This Week: கும்பம் ராசிக்கு அடிக்க போகுது ஜாக்பாட் – இந்த 2 மாற்றங்கள் நிச்சயம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராகிக்கு பெயர்சி ஆவதே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரச்சித்த பெற்ற விசேஷம் கார்த்திகை தீபம். சபரிமலைக்கு மாலை போடுவது, செவ்வாய் வீட்டிற்க சூரியன், அதாவது பகை வீட்டிற்க சூரிய காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வாக்கு ஸ்தானம் பலமடைய போகிறது. கொடுத்த வாக்குறுதியை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றுவீர்கள். சமூகத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கடந்த 2 மாதங்களாக நிலவி வந்த பிரச்சனைகள் முற்றிலும் நீங்கி யோக பலன்களை அதிகம் பெறுவீர்கள். பூர்விக சொத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.
வசதிகள் பெருகும்
வீடு, வண்டி, வாகனம், ஆபரணங்கள் வாங்குவீர்கள். உத்யோகம், தொழிலில் இருந்த தடைகள் நீங்கி ஏற்றம் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நீண்டகாலமாக திட்டமிட்ட சுயதொழில் தொடங்குவீர்கள். குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி அவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் காணப்படும். கடவுளின் பரிபூரண அருளால் இறங்கும் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
திருமண யோகம்
சுபகாரிய தடைகள் விலகும். திருமண முயற்சியில் இருப்போருக்கு நல்ல செய்தி வீடு தேடி வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுப செலவுகள் நிச்சயம் உண்டு. பிரிந்த உறவுகள் ஒன்றிணைவார்கள். வாழ்க்கை துணையுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி அந்யோநியம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். திடீர் அதிர்ஷ்டம், திடீர் பண வரவு உண்டு. பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டு.
பதவி உயர்வு
முதலீடு அதிகரிக்கும். குடும்பத்தில் கால்நடைகள், வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பால்கள். அதனால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். அரசுத்துறையில் பணியாற்றுவோருக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக்கும். தொட்டது துலங்கும். குல தெய்வ வழிபாடு சகல விதத்திலும் உயர்வை கொடுக்கும்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications