Rasi Palan This Week: செல்வத்தை குவிக்கும் கும்ப ராசி.. ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்
Kumbam Rasi Palan: பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன் (Kumbam Rasi Palan)
கும்ப ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு இந்த வாரம் செல்வ செழிப்புடன் இருக்கும் காலகட்டமாக இருக்கும். செல்வ செழிப்போடு, சந்தோஷமாக இருப்பீர்கள். தள்ளிப்போன, தடைபட்ட விஷயங்கள் அனைத்தும் நடக்கும். நிறைய பேருக்கு திருமண யோகம் உண்டு. காதலன், காதலியை சந்திக்கக்கூடிய காலகட்டம். மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும்.
திருமண யோகம்
சுக்கிரன், புதனை குரு பார்ப்பதால் கும்ப ராசியினருக்கு அடுத்த ஒரு மாதத்தில் வரன் அமையும், திருமணம் உறுதியாகும். வீட்டில் மூத்தவர்களின் ஆரோக்கியம், தாயார், மூத்தவர்கள், பாட்டியின் ஆரோக்கியம் எல்லாமே சரியாகும். எல்லா விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சனி இருப்பதால் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
கவனம்
விரயத்தில் சூரியன், செவ்வாய் இருப்பதால் பயணம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கும்பத்தில் பிறந்தவர்கள் வெளிநாட்டில் வேலையில் செட்டிலாவது, வெளிநாடு செல்வது போன்ற யோகங்கள் உண்டாகும். இதுவரை சரியில்லாத நிலைமைகள் அனைத்தும் சரியாகும். தைரியமாக இருக்கக்கூடிய காலகட்டம். இந்த வார இறுதிக்குப் பின்னர் இன்னும் யோகமான நேரமாக இருக்கும்.
சந்தோஷம்
பெரிய சந்தோஷம் உண்டாகும். பெண்கள், பெண்கள் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தீய பழக்க வழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பது நன்மை பயக்கும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு எல்லாமே நன்றாக இருக்கும். அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். தெய்வ கடாட்சம் உண்டாகும். தெய்வ காரியங்களை செய்து மகிழ்வீர்கள்.
பொறுமை அவசியம்
ஆரோக்கியத்திலும், தொழிலிலும் தடைகள் வந்தாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 75 ஆவது பாடலை கேட்பது படிப்பது பூர்வ புண்ணிய தோஷத்தை நிவர்த்தி செய்யும். துணைக்கு செலவுகளை செய்து கொடுப்பது நன்மை பயக்கும். துணையிடம் சண்டை, சச்சரவுகளை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வயிறு, ஜீரண உறுப்புகளில் கவனம் தேவை.












Click it and Unblock the Notifications