Rasi Palan This Week: கும்ப ராசிக்கு 7 நாட்களில் வரப்போகும் அதிர்ஷ்டம்.. பொறுமை ரொம்ப அவசியம்
Kumbam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன் (Kumbam Rasi Palan)
கும்ப ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு கண்டிப்பாக குடும்பத்தில் தேவையில்லாத விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் துணையிடம் வாக்குவாதங்கள் செய்வது, சண்டை போடுவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. அவர்களிடம் பொறுமையாகப் பேசுவது, இணக்கமாகச் செல்வது நல்லது. பெற்றோர், பெரியோர்களுடன் பூர்வீக சொத்துகளில் இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
அனுகூலம்
லாபங்கள், அனுகூலம் காணப்படும். முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் இருக்காது. பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றங்கள் காணப்படும். குடும்பத்தில் புதிய வரவுகள் ஆனந்தத்தைத் தரும். பதட்டம், பயங்கள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். நவக்கிரகத்தில் இருக்கும் சூரியன் வழிபாடு ஏற்றத்தைத் தரும். ஆதித்யஹிருதயம், அனுமன் வழிபாடு செய்வது நல்லது. ஆஞ்சநேயருக்கு பசு நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது.
தானம்
இரட்டிப்பு சந்தோஷங்கள் ஏற்படும். சனிக்கிழமை மதிய வேளைகளில் சாப்பாடு, எலுமிச்சை ஊறுகாய் தானமாகக் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும். பிள்ளைகளுடன் தேவையில்லாத கோபதாபங்கள் ஏற்படும். பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு அபிராமி அந்தாதியில் இருக்கம் 40, 59, 75 ஆவது பாடல்களைப் படிப்பது நன்மையைத் தரும்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் தொண்டை, கழுத்து, கைப் பகுதிகளை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. நிறைய விரயங்கள் ஏற்படும் என்பதால் அதனை சுப விரயமாக செய்து கொள்வது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள், தேவையில்லாத பயங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.
ஜெயம்
பெற்றோர் சொத்துகள், பூர்வீகத்தில் இருந்து வந்த பாதிப்புகள், பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். பண வரவு நன்றாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றங்கள் ஏற்படும்.












Click it and Unblock the Notifications