"தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்!" திட்டவட்டமாக சொன்ன துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கர்நாடகாவை சேர்ந்த ஒருவர், குஜராத்தை சேர்ந்த ஒருவர் பிரதமராகும்போது, தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரும் நிச்சயம் பிரதமர் ஆவார் என்று தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பல்வேறு கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளித்தார்.

மீனாட்சியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்று சொன்ன அவர், அந்த மீனாட்சியினுடைய அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் என்றும் அனைவருக்கும் என்னுடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் என்றும் வாழ்த்துகலை முதலில் தெரிவித்தார்.
தமிழக அரசு குறித்தோ, தமிழகத்தில் உள்ள சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் குறித்தோ அல்லது நரேந்திர மோடியின் ஆட்சி குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
அவர் மேலும், "தமிழர் ஒருவர் நாட்டின் பிரதமராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். அதற்கான வாய்ப்பு என்றைக்கும் இருக்கிறது. இந்த ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் அதற்கான வாய்ப்பு உண்டு. கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் பிரதமராக இருந்திருக்கிறார்; குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக இருக்கிறார். அதுபோல, தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ஒரு நாள் நாட்டின் பிரதமராக வருவதற்கு நிச்சயமாக வாய்ப்பிருக்கிறது" என்றார்.



Click it and Unblock the Notifications
