Kumbam: தடைகளை தகர்த்தெறியும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

Kumbam Rasi Palan: மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kumbam-rasi-palan-what-kind-of-benefits-will-kumbam-rasi-people-get-from-may-11-to-18

இந்த வாரம் சித்திரை முடிந்து வைகாசி மாதம் பிறக்கிறது. அந்த வகையில், மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

கும்ப ராசி பலன் (Kumbam Rasi Palan)

கும்ப ராசியினருக்கு உறவுகள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல அனுகூலம் காணப்படும். எதிரிகள் விஷயத்தில் வாக்குவாதங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அனுகூலம், சந்தோஷம் ஏற்படும்.

பரிகாரம்

பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். குடும்பத்தில் பிரச்சனையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கோளார் பதிகத்தை கேட்பதும், சிவன் வழிபாடு செய்வதும் சகலவிதமான நன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்கும். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

முயற்சிகளில் வெற்றி

எல்லா முயற்சிகளும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். இடமாற்றம் ஏற்படும். பொருளாதார மாற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள். எல்லா விஷயங்களையும் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை ஏற்படும். டார்கெட் செய்யும் விஷயங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். மன நிம்மதி ஏற்படும்.

பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். காதல், தேவையில்லாத ரிலேஷன்ஷிப், பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நினைத்த காரியங்களில் ஜெயிக்கும் யோகம் உண்டாகும்.

சிக்கல் தீரும்

நீண்ட நாட்களாக இருந்து வந்த தடைகள் நீங்கும். தடைகளை தவிடு பொடியாக்க கூடிய காலகட்டம். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய சூழல் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். புதிய முயற்சிகள் பெரிய செல்வாக்கையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும்.

வழிபாடு

தொடர்ச்சியாக இருந்து வந்த கஷ்டங்கள் நிவர்த்தியாகும். தூக்கமின்மையும், மனஅழுத்தமும் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை. வெளியில் இருந்து வர வேண்டிய பணங்கள் உங்கள் பேச்சின் மூலமாக வந்து சேரும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சநதோஷம் 80 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 80 சதவீதமும் நன்றாக இருக்கும். ஆதிபராசக்தி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+