கும்ப ராசிக்கு அதிர்ஷ்டம், ஆபத்து இரண்டையும் கொடுக்கும் செவ்வாய்.. பேச்சில் ரொம்ப கவனம்
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூலை 28 முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் செவ்வாய்ப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த செவ்வாய் பெயர்ச்சியின்போது கும்ப ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் பகவான் சகோதரக்காரகன். நிலம், பூமிக்கு அதிபதியானவர். ரத்தத்துக்கும், ஆக்ரோஷத்துக்கும், கோபத்துக்கும் காரணமானவர். கட்டிடம், நெருப்பு, சிவப்பு நிறம், உடற்பயிற்சி, விளையாட்டுத் துறைக்கு தொடர்பானது செவ்வாய் கிரகம். இந்த செவ்வாய் பகவான் ஜூலை 28 ஆம் தேதி சிம்மத்தில் இருந்து கன்னி மனைக்கு பெயர்ச்சி ஆகப்போகிறார். செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி வரையிலான 48 நாட்கள் கன்னியில் இருந்து செவ்வாய் பகவான் பலனைக் கொடுக்கப் போகிறார்.

இந்த காலகட்டத்தில் உத்திர நட்சத்திரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை சூரிய பகவானின் நடசத்திரத்தில் பயணம் செய்கிறார். ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அஸ்தம் எனும் சந்திரனின் நட்சத்திரத்திலும், செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தனது சொந்த நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் பயணம் செய்யப் போகிறார்.
இந்த செவ்வாய்ப் பெயர்ச்சி காலகட்டத்தின்போது கும்ப ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்கள், மாற்றங்கள் நமக்கு கிடைக்கும். எந்த தெய்வ வழிபாடு உகந்தது என்பது குறித்து பார்க்கலாம்.
கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் 3க்கு உரியவர். முயற்சி ஸ்தானம், தொழில் ஸ்தானத்தின் அதிபதி. முயற்சியில் சிறு சிறு தடைகள் வந்து சேரும். எந்தவொரு விஷயத்தை செய்வதற்கு முன்பும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொள்வது நல்லது. பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது. மீறி போட்டால் கண்டிப்பாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கோபம் வேண்டாம்
3 ஆம் இடம் என்பது இளைய சகோதர சகோதரிகளை குறிக்கக்கூடிய இடம். 8 ஆம் இடத்தில் அமரும்போது அவர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். அவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. அவர்களிடம் கோபப்படுவது, ஆக்ரோஷப்படுவதை தவிர்ப்பது நல்லது. ஆவணங்கள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிலம் வாங்குவதற்கான யோகம் உள்ளது. ஆனால், அதில் ஏதேனும் வில்லங்கம் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்வது நல்லது.
பேச்சில் கவனம்
கோபம், ஆக்ரோஷம் ஏற்படும். செவ்வாய் 2 ஆம் இடத்தைப் பார்ப்பதால் தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்தை பார்க்கிறார். பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு பிடிவாத குணம், தான் சொல்வது தான் சரியென்று சொல்லும் காலமாக இருக்கும். திடீர் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். திடீர் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும், பங்குச் சந்தையில் பணம் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஏதோ ஒரு வகையில் பணத்தைக் கொடுக்கக் கூடிய வாய்ப்புள்ளது. பணயங்கள், அலைச்சல்கள் இருந்தாலும் அதன் மூலமாக பண வரவு உண்டாகும்.
திட்டமிடல் அவசியம்
மறைந்திருக்கும் விஷயங்கள் உங்களுக்கு புலப்படும். தொழில் சார்ந்த விஷயங்களில் நீங்கள் எதை செய்தாலும் யோசித்து செயல்படுவது நல்லது. திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி உறுதியாகக் கிடைக்கும். தொழிலில் உள்ள பாதிப்புகளைக் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்யும் காலகட்டமாக இருக்கும். தொழிலில் இருக்கும் பிரச்சனைகளைக் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்யும் காலகட்டமாக இருக்கும். கூடுதல் வேலைப் பளு அதிகரிக்கும். அதனால், உழைப்புக்கேற்ற வருமானங்கள் கிடைக்கும்.
பதவி உயர்வு
10 ஆம் அதிபதியாக இருப்பதால் உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது. சீருடை அணிந்து பணியாற்றுவோருக்கு திடீர் மாற்றம், பதவி உயர்வு, இடமாற்றம் உண்டாகும் வாய்ப்புள்ளது. பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் செவ்வாய் பயணிக்கும்போது தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. அரசு ஆவணங்கள், பத்திரப் பதிவு, காப்பீடு போன்ற விஷயங்களில் நன்மை பயக்கும். அதிகாரம், நிர்வாகம் கிடைக்கும். கோபம், ஆக்ரோஷத்தால் வேலையை இழக்கும் அபாயமும் உள்ளது.
கவனம்
ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை சந்திரனின் நட்சத்திரத்தில் செவ்வாய் பயணிக்கிறது. சந்திரன் என்பது 6 ஆம் அதிபதி கடன், நோய், வம்பு, வழக்கு, கோர்ட், கேஸை குறிக்கும். இந்த காலகட்டத்தல் எதிர்மறையான விஷயங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது. இரவு நேரப் பயணங்களை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி, சகோதரரிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
-
இந்த வாரம் அதிர்ஷ்டம் யாருக்கு?.. கடகம், சிம்மம், கன்னி ராசிக்கான முழு பலன்கள் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications