கடக ராசிக்கு எல்லா பிரச்னைக்கும் எண்டு கார்டு.. இனி ராஜா மாதிரி வாழப் போறீங்க
ஏப்ரல் மாத பலன்: 2025 ஆம் ஆண்டில் சனி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மே மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ராசி மாற்றம், கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

2025 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் நிறைவடைந்து ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற சனிப்பெயர்ச்சியின் மூலமாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. மே மாதம் 12 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி, 14 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளதால் எந்தெந்த ராசியினருக்கு அனுகூலம் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அந்த வகையில், இந்த ஏப்ரல் மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலம்.
கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு சோதனைகள் தீர்ந்துவிடும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். சனிப்பெயர்ச்சியில் இருந்து அஷ்டம சனி விலகி உள்ளது. 9 ஆம் இடத்தில் 5 கிரகங்கள் ஒன்று கூடியுள்ளன. 15 ஆம் தேதிக்குப் பின்னர் 10 ஆம் இடத்தில் சூரியன் உச்சமாகப் போகிறார்.
மிகவும் கஷ்டப்பட்டவர்கள் அனைவருக்கும் படிப்படியான மாற்றங்கள் ஏற்படும். ஆயில்யம், பூசம், புனர்பூசம் ஆகிய 3 நட்சத்திரக்காரர்களையும் கடந்த காலங்கள் புரட்டி எடுத்துவிட்டது.
கடுமையான சோதனைக்கு உள்ளானவர்களுக்கு அதில் இருந்து மீண்டு வர கொஞ்சம் நாளாகும். ஏப்ரல் மாதத்தில் இருந்து முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். படிப்படியாக வெற்றி, மகிழ்ச்சியை நோக்கி நகரும் காலமாக இருக்கும்.
2 ஆம் அதிபதி 10 ஆவது வீட்டில் உச்சமாக இருப்பதால் ஆசிரியர் பணியில் இருப்பவர்கள், வழக்கறிஞர், நீதித் துறை, நிர்வாகத் துறை, நிதித் துறை, அரசாங்கத் துறையில் இருப்பவர்களுக்கு, பேச்சு மூலம் சம்பாதிக்கும் துறையில் இருப்பவர்களுக்கு இந்த மாதத்தில் இருந்து நல்ல வருமானம் வரும்.
கடந்த காலத்தில் 2 ஆண்டாக எதில் கஷ்டத்தை சந்தித்தீர்களோ அவை எல்லாம் நீங்கும், எதை இழந்தீர்களோ அவை எல்லாம் திரும்பி வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். கணவன், மனைவிக்குள் சண்டைகள் தீரும். விட்டுக் கொடுத்து போவீர்கள். வழக்குகளில் சாதகமான சூழல் ஏற்படும். நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கை ஏற்படும். பெரிய அளவில் சோதனைகள் எதுவும் ஏற்படாது.
அனைத்து விஷயங்களிலும் நிம்மதி ஏற்படும். சமாளித்துக் கொள்ளலாம் என்கிற தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். பெண்களுக்கு இருந்து வந்த கடுமையான மன அழுத்தங்கள் தீரும். கணவர், குழந்தை சம்பந்தப்பட்ட விஷயங்கள், காதலர்களுக்குள் இருந்து வந்த மன அழுத்தம் தீரும்.
முட்டுக்கட்டைகள் விலகக் கூடிய நல்ல மாதமாக இருக்கும். வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.












Click it and Unblock the Notifications