கும்பத்துக்கு குஷியான காலகட்டம்.. ஜென்மசனி விலகியாச்சு.. இனி தொட்டதெல்லாம் வெற்றி
ஏப்ரல் மாத பலன்: 2025 ஆம் ஆண்டில் சனி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மே மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ராசி மாற்றம், கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

2025 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் நிறைவடைந்து ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சனிப்பெயர்ச்சியின் மூலமாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. மே மாதம் 12 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி, 14 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளதால் எந்தெந்த ராசியினருக்கு அனுகூலம் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், இந்த ஏப்ரல் மாதத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பம்: கும்பம் ராசிக்காரர்களுக்கு பெரிய விடுதலை கிடைக்கப் போகிறது. ஜென்ம சனி நிறைவடைந்துவிட்டது. இரண்டரை வருடம் பட்ட கஷ்டங்களில் இருந்து எல்லாம் படிப்படியாக மாற்றங்கள் உண்டாகும். ஜென்மசனி விலகி இப்போது 2 ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, புதன், சுக்கிரன் போன்ற ஐந்து கிரகங்கள் உள்ளன.
ஜென்ம சனி விலகியுள்ளதால் மனதில் தைரியம் உண்டாகும். வாழ்க்கையில் ஒரு வெளிச்சம் உண்டாகும் காலகட்டமாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கை அமைப்புகள் இனி நன்றாக இருக்கும். இளைஞர்கள் இதுவரை இருந்துவந்த தோல்வி மனப்பான்மையில் இருந்து வெளியில் வருவீர்கள். பணம் சம்பாதிப்பதற்கு இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.
கண்ணீர் நிற்கக்கூடிய நேரமாக இருக்கும். காதல் தோல்வியில் இருந்து மீண்டு வருவீர்கள். 90 சதவீத கும்ப ராசிக்காரர்கள் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு விதமான கஷ்டங்களைச் சந்தித்து வந்திருப்பீர்கள். எல்லா பாதிப்புகளும் படிப்படியாக விலகக்கூடிய காலகட்டமாக இருக்கும். மன தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும். உழைப்புக்கான பலன்களைப் பெறுவீர்கள்.
காதல் தோல்வி அடைந்தவர்கள் இனிமேல் அவர்களுடன் இணைவதற்கான வாய்ப்பே இல்லை. இனிமேல் வரக்கூடிய விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு அருமையாக இருக்கும். எல்லாவிதத்திலும் படிப்படியாக மீண்டு வரக்கூடிய தன்மை உள்ளது. தொழில் நன்றாக இருக்கும். வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பெரியவர்களுக்கு இளைஞர்களைப் பார்த்து சந்தோஷம் ஏற்படும். படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இளைஞர்களுக்கு வாழ்க்கையில் ஒரு வழி பிறக்கும்.
நோய் தீரும், கடன் தீரும். வீட்டில் சந்தோஷம் ஏற்படும். பதட்டங்கள் அனைத்தும் தீரும். மாற்றம், முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அனைத்து நற்பலன்களும் கிடைக்கும் மாதமாக இந்த ஏப்ரல் மாதம் இருக்கும்.












Click it and Unblock the Notifications