மகர ராசிக்கு சனி விலகியாச்சு.. உங்க மனசுக்கு பிடிச்சதை செய்வீங்க!.. மே மாதம் ராஜவாழ்க்கை வெயிட்டிங்

Subscribe to Oneindia Tamil

ஏப்ரல் மாத பலன்: 2025 ஆம் ஆண்டில் சனி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மே மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ராசி மாற்றம், கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

lets-take-a-look-at-the-benefits-that-magaram-capricorn-rasi-people-will-get-in-april-and-the-thi

2025 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் நிறைவடைந்து ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற சனிப்பெயர்ச்சியின் மூலமாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. மே மாதம் 12 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி, 14 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளதால் எந்தெந்த ராசியினருக்கு அனுகூலம் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், இந்த ஏப்ரல் மாதத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு மகா உன்னதனமான மாதத்தின் ஆரம்பமாகும். ஏழரைச் சனி நிறைவடைந்தது. மூன்றாம் இடத்தில் சூரியன், சனி, புதன், ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் உள்ளன. ஆனால் உங்கள் ராஜயோகாதிபதி பலவீனமாகத்தான் இருக்கிறார். பாக்கியாதிபதியும் பலவீனம். தர்மகர்மாதிபதி என்று சொல்லக்கூடிய 9, 10க்கு உரியவர்கள் ராகுவோடு சேர சனியும் அங்கே போய் சேருகிறார்.

சில விஷயங்களில் தலையை பிய்த்துக் கொள்ளும் சூழ்நிலை உண்டாகும். ராசியை குரு பார்ப்பதால் எந்தவொரு விஷயத்திலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. ஆறாம் இடத்தில் இருந்து வந்த செவ்வாய் ஏழாம் இடத்துக்கு வந்து ராசியைப் பார்ப்பதால் கணவன், மனைவிக்கிடையே ஈகோ பிரச்சனை உண்டாகும். மகர ராசி ஆண்களுக்கு இதுவரை மனைவியின் மிகப்பெரிய உதவி கிடைத்திருக்கும். இனிவரும் காலங்களில் அது தலைகீழாக மாறுவதற்கான வாய்ப்புள்ளது.

3 ஆம் இடத்துக்கு சனி வந்துவிட்டார். மே மாதம் 18 ஆம் தேதிக்குப் பிறகு இதற்குண்டான பலன் கிடைக்கும். 3 ஆம் இடத்தில் கிரகண மற்றும் அஸ்தமன தோஷத்தில் சனி இருப்பதால் பெரியளவில் இப்போது மாற்றம் ஏற்படாது. ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு அமோகமான பலனைப் பெறுவீர்கள். 8 ஆம் அதிபதி 4 ஆம் இடத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பிறகு மாறுகிறார். தாய் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறிய சிறிய சிக்கல்கள் ஏற்படும்.

தாய் சொல்லைக் கேட்டுக் கொண்டு போகும் அமைப்பு உங்களுக்கு உண்டு, வீடு, வாகன விஷயங்களில் செலவு உண்டாகும். சுக ஸ்தானம் வலுவாக இருப்பதால் உங்களுக்குப் பிடித்த விஷயங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். சிலருக்கு குறுகிய தூர பயணங்கள் ஏற்படும். அந்த பயணங்கள் மூலமாக நல்ல லாபத்தைப் பெறும் காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+