விருச்சிகத்துக்கு பணம் கொட்டும்.. வேலை, தொழிலில் வெற்றி.. அதிர்ஷ்டத்தை அள்ளும் நேரம் இது
ஏப்ரல் மாத பலன்: 2025 ஆம் ஆண்டில் சனி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மே மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ராசி மாற்றம், கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

2025 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் நிறைவடைந்து ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற சனிப்பெயர்ச்சியின் மூலமாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. மே மாதம் 12 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி, 14 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளதால் எந்தெந்த ராசியினருக்கு அனுகூலம் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், இந்த ஏப்ரல் மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாத ஆரம்பத்திலேயே நீச்சமாகிறார். ஏற்கனவே செவ்வாய் 8 இல் மறைந்து 9 ஆம் இடத்துக்கு நகர்ந்தாலும் ராசிநாதன் நீச்சமாவது நல்லதொரு நிலைமை இல்லை. 5 ஆம் இடத்தில் சூரியன், சனி, ராகு, சுக்கிரன், புதன் எல்லா கிரகங்களும் கூடியிருக்கின்றன. பிள்ளைகள் சார்ந்த விஷயங்களில் சிறிய பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். பிள்ளைகளை நினைத்து மன பாரத்திலும், வருத்தங்களிலுமே இருந்திருப்பீர்கள்.
பண வரவுகளில் எந்தவித தடையும் இருக்காது. பத்தாம் அதிபதி 15 ஆம் தேதிக்குப் 6 ஆம் இடத்தில் உச்சமடைகிறார். இதனால் பதவி உயர்வு பெறக்கூடிய வாய்ப்பு உண்டாகும். வேலையில் சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் புதிய கிளை திறப்பது, நல்ல லாபம் காணும் வாய்ப்புண்டு. குடும்பத்தில் குழந்தைகள், கணவன், மனைவிக்கிடையே இருக்கும் கருத்து வேற்றுமை அமைப்புகள் அனைத்தும் மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
பெரிய அளவில் சோதனைகள் இருக்காது. ராசிநாதன் இந்த மாதம் முழுவதும் பலவீனமாக இருந்தாலும், ராசியை குரு பார்ப்பது அருமையான காலகட்டமாக இருக்கும். குழப்பம், அதீத சிந்தனைகள் ஏற்படக் கூடிய நிலை உண்டாகும். சில பேருக்கு கடன் தொல்லைகள், நோய் தொல்லைகள் கவலைகளைத் தரும். கடன்காரர்கள் வந்து நிற்கக்கூடிய நிலை ஏற்படும்.
ஆனாலும், 15 ஆம் தேதிக்குப் பிறகு எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்கும் காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பண வரவில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். எந்தவொரு செயலை செய்தாலும் அதனை யோசித்து, குழப்பத்துடன் செய்யும் காலகட்டமாக இருக்கும். ஆனாலும் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படாத மாதமாக இருக்கும். குருவின் பார்வை இருப்பதால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications