தை மாதத்தில் நடக்கப்போவது என்ன? - பஞ்சாங்கம் சொல்வது இதுதான்.. பிரபல ஜோதிடர் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தின் சிறப்புகள், இந்த மாதத்தில் நடக்கப்போவது குறித்து பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

Rasi palan tamil matha palan

மகர மாதம்

சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். மகர மாதம் என்றும் கூறப்படுகிறது. சூரியனின் தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் காலம் தான் தை மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஐதீகம். மகாபாரதத்தின் பிதாமகரான பீஷ்மர் தை மாதத்தில் தனது உயிர் போவதற்கு அம்பு படுக்கையில் காத்துக் கொண்டிருந்தாராம். அந்த அளவுக்கு சிறப்பு பெற்றது தை மாதம். தேவர்களின் உதயகாலம் தை மாதம்.

பொங்கல் பண்டிகை

சூரியன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக தை மாதம் உள்ளது. சூரியன் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. தை மாதம் 1 ஆம் தேதியான ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக ராசியில் சித்த யோகத்தில் அமையக்கூடிய நாளே பொங்கல் பண்டிகை. இந்தப் பண்டிகையின் விசேஷமே சூரியன், விவசாயிகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதாகும்.

பொங்கல் வைக்க நல்ல நேரம்

பொங்கல் தினத்தன்று காலையில் நேரமாக எழுந்து குளித்து முடித்து புத்தாடை அணிந்து சுவாமி கும்பிட்டுவிட்டு, சூரிய பகவானை வழிபாடு செய்து கிழக்கு நோக்கி அமர்ந்து பொங்கல் சாப்பிட வேண்டும். தை மாதத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் பொங்கல் வைக்கலாம். காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் பொங்கல் வைத்து இறைவனை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். சுக்கிர ஓரை, புதன் ஓரையாக இருந்தாலும் குளிகை நேரத்தில் பொங்கல் வைப்பது விசேஷமாகும்.

வழிபாடு, தானம்

பொங்கல் தினத்தில் குலதெய்வ வழிபாடு செய்வது, சூரியனை வழிபாடு செய்வது, பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது, அன்னதானம் வழங்குவது, பசு மாடுகளுக்கு உணவு கொடுப்பது, வாயில்லா ஜீவ ராசிகளுக்கு உணவளிப்பது, அநாதை ஆசிரமங்களுக்கு உதவுவது, கோயில்களில் நடைபெறும் அன்னதானத்துக்கு மிளகு, சீரகம், எண்ணெய், அரிசி போன்ற பொருள்கள் வாங்கி கொடுப்பது ஏற்றத்தை தரும்.

தை முக்கிய நிகழ்வுகள்

தை மாதத்தில் 11 ஆம் நாள் ரதசப்தமி நடைபெறுகிறது. தை 13 ஆம் தேதி கிருத்திகை வரவுள்ளது. தை 18 ஆம் தேதி பிப்ரவரி 1 ஆம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படவுள்ளது.

தை மாதத்தில் நடக்கப்போவது என்ன?

உலகம் முழுவதும் போர் மேகங்கள் காணப்படும். கப்பல் வாணிபங்கள், விமானங்கள் தடைபடக்கூடிய சூழல் ஏற்படும். தலைவர்கள் தவறான முடிவுகளை எடுப்பார்கள். தென்மாவட்டத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். புயல் பாதிப்புகள் ஏற்படக்கூடும். மின்சார உற்பத்தி மழையால் சேதமாகக்கூடிய அமைப்பு காணப்படுகிறது. மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடும்.

கனமழை பெய்யும்

எதிர்பாராத இடங்களில் இடியுடன் கூடிய கனமழை காணப்படும். வறட்சிப் பிரதேசங்களில் மழை பெய்யும். சேலத்தில் சூறாவளிக் காற்றுடன் கூடிய கன மழை பெய்யும். அகத்தியர் மலையில் கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். சென்னை வடகிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அதனால் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும்.

வெள்ளப்பெருக்கு

கடலூர், பாண்டிச்சேரி அருகில் சிறிய சூறாவளி ஏற்படும். வயல்கள், விளைபயிர்கள் சேதமாகும். தோட்டங்களில் பூச்சிகளால் தொந்தரவுகள் ஏற்படும். சதுரகிரி மலையில் வெள்ளப்பெருக்கு, உப்பளங்களில் பாதிப்பு, விவசாயக் கிடங்குகளில் பாதிப்பு ஏற்படும். தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்யும்.

நோய்க்கிருமிகள் பரவும்

வெளிநாடுகளில் இருந்து நோய்க் கிருமிகள் பரவும். இளைஞர்கள், குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கூட்டம் கூடும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லாமல் இருப்பது நல்லது. சூரியன் பகை வீடான மகரத்தில் இருப்பதால் தலைவர் பொறுப்புகளில் இருப்பவர்கள் கடத்தப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

கவனம்

ராணுவத் தலைமை, போலீஸ் தலைமை, செல்வந்தர்கள், விஞ்ஞானிகள், விளையாட்டுத் துறையில் முன்னணியில் இருப்பவர்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பது நன்மை பயக்கும். இயற்கையை பேணிக் காத்துக் கொள்ள வேண்டிய காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+