Magaram rasi palan: மகர ராசிக்கு அள்ளி கொடுக்கும் குரு பகவான்.. வீடு, மனை, சொத்துகள் வாங்கும் யோகம்
நவம்பர் மாத ராசி பலன்: 2025 ஆம் வருடம் இப்போதுதான் பிறந்தது போல உள்ளது. அதற்குள் 11வது மாதமான நவம்பர் மாதம் பிறக்க போகிறது. இந்த வருடத்தில் ஏற்கனவே கிரக நிலைகளில் ஏராளமான மாற்றங்களை சந்தித்துவிட்டோம். நவம்பர் மாதத்திலும் கிரக நிலைகளில் மாற்றங்கள் காணப்படும். இது சில ராசிகளுக்கு நற்பலன்களை கொடுக்கும். சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையும் வரலாம். நவம்பர் மாதம் மகர ராசிக்கு எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்தில் இருக்கிறார். அவர் நவம்பர் 11 ஆம் தேதி வக்ர கதி அடைகிறார். பொதுவாக சில ராசிகள் குரு பகவான் உச்சமடைந்தாலே நல்ல பலன்களை பெறுவார்கள். சில ராசிகள் குரு பகவான் உச்சத்தில் இருந்து வக்ரமானால் நல்ல பலன்களை பெறுவார்கள். மேலும் இந்த நவம்பர் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

நவம்பர் மாத பலன்கள்
சூரியன், சுக்கிரன் இணைந்து மூல திரிகோண வீட்டில் இருக்கிறார்கள். இதில் சூரியன் நீசமடைந்தாலும் நீட்ச பங்க ராஜயோகம் கிடைக்கப் போகிறது. மேலும் சுக்ரன், புதன் இணைந்து லட்சுமி நாராயண யோகம் தரப்போகிறார்கள். சூரிய பகவான் 16 ஆம் தேதிக்கு பிறகு செவ்வாயின் வீடான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதே வீட்டில் 26 ஆம் தேதிக்கு பிறகு சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். ஏற்கனவே அங்கு செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். தவிர குருவின் பார்வையும் உள்ளது.
சூரியனும், செவ்வாயும் இணைவது மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். இதனால் அரசு, அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் மிகப்பெரிய ஏற்றம் காண்பார்கள். இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல யோகம் கிடைக்கும். இந்த கிரக நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மகர ராசிக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.
மகரம்
மகர ராசி மற்றும் மகர லக்னத்தினருக்கு வரும் 28 ஆம் தேதி சனி வக்கிர நிவர்த்தியாகிறார். மகிழ்ச்சியான மாதமாக இருக்கும். உங்கள் ஜாதகத்தில் சனி வக்கிரமாக இருந்தால் பொருளாதாரம் போன்றவற்றை பார்த்துக் கொள்வது நல்லது. ராசியை குரு பார்ப்பதாலும், குரு வக்கிரமாவதாலும், 11 ஆம் தேதியில் இருந்து நீசமாவதாலும் ஓரளவு நன்மைகளைக் கொடுக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் விஷயங்கள், வேலை சார்ந்த விஷயங்கள், பயணம் சார்ந்த விஷயங்களை நவம்பர் 11 ஆம் தேதிக்கு முன்பு போய் வருவது நல்லது.
குரு பார்வை
11 ஆம் தேதிக்குப் பிறகு செல்லலாம். ஆனால், மெதுவாக நடைபெறும். தடை, தாமதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஜாதகத்தில் சனி வக்கிர கதியில் இருந்தால் பொருளாதாரம் அற்புதமாக இருக்கும். வக்கிரமாக இல்லையெனில் நவம்பர் 28 ஆம் தேதிக்குப் பிறகு பொருளாதாரம் நன்றாக இருக்கும். செவ்வாய் 11 ஆம் வீட்டில் வந்து நின்று குரு பார்வை பெறப் போகிறார். மனதில் நிம்மதி பெருகும். எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம் தோன்றும்.
சொத்துகள் வாங்கும் யோகம்
வீடு, மனை, சொத்துக்கள் அமைந்து வரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். லாபம் அபரிமிதமானதாக இருக்கும். சிறிய தொகையை வைத்து பெரும் லாபத்தைப் பெறும் பாக்கியத்தைப் பெறுவீர்கள். சுக்கிரன் 5, 10க்கு உடையவர். குடும்பம், தொழிலில் ஆட்சி பெற்று தன் சொந்த வீட்டிலேயே ஆட்சி பலத்துடன் புதனுடன் சேர்ந்து அமர்ந்து லட்சுமி நாராயண யோகத்தை உண்டாக்குகிறார். தொழிலில் நல்ல லாபங்கள் உண்டாகும்.
வெற்றி மேல் வெற்றி
குடும்பத் தேவைகள், குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குலதெய்வத்தின் அனுக்கிரகம் முழுமையாகக் கிடைக்கும். புதன் 6,9க்கு உடையவர். அப்பா, அம்மா மூலமாக உதவிகள் கிடைக்கும். வேலைவாய்ப்புகளுக்கு உண்டான வாய்ப்புகள் ஏற்படும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
தடைகள் தவிடு பொடியாகும்
குரு பார்க்கின்ற இடத்திற்கு பலமிருப்பதால் தடைகளை உடைத்து வெற்றிகளைத் தருவார். சூரியன் 8க்கு உடையவராக இருந்தாலும் நீசபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். 8க்கு உடையவர் 11 ஆம் வீட்டுக்கு 16 ஆம் தேதிக்கு மேல் வரும்போது விபரீத ராஜயோகம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டங்கள், திடீர் வருமானங்கள் ஏற்படும். ஏழரை சனியின் தாக்கங்கள் குறைந்து ஓரளவு நன்மைகள் கிடைக்கும். பெரிய அளவு எதிர்பார்க்காவிடினும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications