Rasi Palan This Week: மகர ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுது
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் வாரமாக இந்த வாரம் உங்களுக்கு அமையும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். நவக்கிரகத்தில் இருக்கும் கேது வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது அனுகூலத்தை ஏற்படுத்தும். வண்டி, வாகனத்தில் செல்லும்போது விதிமுறைகளைக் கடைப்பிடித்து நிதானமாகச் செல்வது நனல்லது.
யோகங்கள்
ரத்த அழுத்தம், ஹார்மோன் குறைபாடு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உயர்ந்த நிலைக்குச் செல்லும் யோகம் உண்டாகும். சுப காரியத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில் அபிவிருத்தி, உத்தியோக அபிவிருத்தி, வியாபார அபிவிருத்தி, படிப்பு அபிவிருத்தி என அனைத்து விதமான யோகங்களும் உண்டாகும்.
முயற்சிகளில் வெற்றி
புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். சொந்த தொழில் தொடங்கும் நல்ல காலகட்டம். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். கலைத் துறையினர், படைப்பாளிகள், மீடியா துறையினர் பெரிய அளவில் முன்னேற்றம் பெறுவீர்கள். மிகப்பெரிய சந்தோஷத்தைப் பெறும் காலகட்டம். சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம் இருக்கக் கூடியவர்களுக்கு பதட்டம் இருக்கும் என்பதால் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
தடைகள் நீங்கும்
நீண்ட நாட்களாக இருந்த தடைகள் தவிடுபொடியாவதை கண்கூடாகப் பார்க்கும் அற்புதமான காலகட்டம். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் இருந்த பாதிப்புகள், கஷ்டங்கள் பரிபூரணமாக நீங்கும். தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு கூடும். ஏற்றமும், நம்பிக்கையும், அனுகூலமும் உயரும் அமைப்பு ஏற்படும்.
ஜெயம்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு கிடைக்கும் நேரமாக இருக்கும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அடுத்தடுத்து முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications