ஜாவா சுந்தரேஷனாக மாறும் மகர ராசி.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Weekly rasi palan Magaram Lucky zodiac signs

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.

அந்த வகையில், அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு வேலை இல்லாதவர்களுக்கு பெரிய வேலை கிடைக்கும். பொறுப்புகளுடன் கூடிய வேலைகள் கிடைக்கும். எதற்காகவும், யாருக்காகவும் பயப்படாத சூழ்நிலை ஏற்படும். வேலை, தொழில், அந்தஸ்து, உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது.

கவனம்

வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பண வரவு நன்றாக இருக்கும். தைரியம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. 10 ஆம் இடத்தில் இரண்டு பாவிகள் இருப்பதால் நல்ல ஏற்றம் ஏற்படும். சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் தீரும்.

திருமண யோகம்

காதல் அமைப்பு ஏற்றத்தை ஏற்படுத்தும். திருமண யோகம் உண்டாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பற்றக்கூடிய யோகம் உண்டாகும். முதலீடுகளுக்குப் பஞ்சம் இருக்காது. தைரியம் ஏற்படும். நம்பிக்கை உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து குட் நியூஸ் கண்டிப்பாக வரும்.

ஜெயம்

நல்ல விஷயங்கள் அனைத்தும் உங்களை வந்து சேரும். தொழில் மாற்றங்களுக்காக காத்திருந்தவர்களுக்கு கட்டாயமாக நல்ல தொழில் மாற்றம் ஏற்படும். பற்கள், தொண்டையில் பாதிப்புகள் இருப்பவர்கள் சிறிது கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். சளி தொந்தரவால் சிரமத்துக்குள்ளாகும் நிலை ஏற்படும். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும்.

நல்ல மாற்றங்கள்

இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம் என அனைத்து விதமான நல்ல மாற்றங்களும் ஏற்படும் அனுகூலமான காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் பிறர் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அதேநேரம் மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்களும் தலையிடாமல் இருப்பது நல்லது. காதல் அமைப்பிலும் பிறர் தலையீடு, மற்றவர்கள் காதல் விஷயத்தில் நீங்கள் தலையிடுவதையும் தவிர்ப்பது நல்லது.

வழிபாடு

ஆணாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் கவனமாக இருப்பது நன்மையை ஏற்படுத்தும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். திங்கள்கிழமையில் பெருமாள் வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+