Rasi Palan This Week: அஷ்டலட்சுமி கடாட்சத்தைப் பெறும் மகர ராசி.. அதிர்ஷ்த்துக்கு மேல் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 5 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

magaram-rasi-palan-what-kind-of-benefits-that-magaram-capricorn-signs-will-get-from-october-22-to

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.

அந்த வகையில், அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சுப காரியத் தடைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில், உத்தியோகம், படிப்பு, வியாபாரத்தில் நல்ல அனுகூலம் ஏற்படும். இதுவரை தடைபட்டு வந்த அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடக்கும். இழுபறியாக இருந்த நிலைமை மாறும். தொழில் அதிபராக மாற வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறும். ஐப்பசி மாதத்தில் இருந்து நிறைய விஷயங்கள் சாதகமாக நடக்கும்.

அஷ்டலட்சுமி கடாட்சம்

குடும்பத்தில் மற்றவர்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதையும் தவிர்ப்பது நல்லது. ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அஷ்டலட்சுமி கடாட்சம் உண்டாகும்.

தொழில்

படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர், தொழில் வல்லுநர்கள், இளம் விஞ்ஞானிகள், ஸ்டார்ட் அப் ஆரம்பித்தவர்கள் அனைவரும் பெரிய பணத்தைப் பெறக்கூடிய அனுகூலம் ஏற்படும். மனதில் இருந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும் அற்புதமான காலகட்டம். அதிகளவிலான யோக பலன்கள் கிடைக்கும்.

பணவரவு

பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் பெறுவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். வண்டி, வாகனத்தை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த அந்நியோன்ய குறைபாடுகள் வந்தால் வெள்ளைக் கொடி காட்டி இணக்கமாகச் செல்வது நல்லது. குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.

வழிபாடு

எதிர்பாலினத்தவர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நற்பலன்களையும், அனுகூலத்தையும் அள்ளித் தரும் காலகட்டமாக இருக்கும். விநாயகர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். காரியசித்தி மாலை கேட்பது உங்களுக்கு எல்லா விதமான சந்தோஷத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+