Rasi Palan This Week: மகர ராசிக்கு 7 நாட்களில் நடக்கும் அதிசயம்.. வாகனத்தில் ஆபத்து காத்திருக்கு
வார ராசி பலன்: டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு தடைபட்டுக் கொண்டே இருந்த விஷயங்கள் இனி அடுத்தடுத்து நடக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் மாறும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக என அனைத்து விஷயங்களிலும் நன்மைகள் உண்டாகும். கஷ்டங்கள் அனைத்தும் தீரும் நல்ல காலகட்டம். மகர ராசியினருக்கு எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும் சாத்தியக்கூறுகள் உண்டு.
சுபவிரயம் ஏற்படும்
உத்தியோகம், தொழில், வியாபாரம் தொடர்பாக மன குழப்பங்களைத் தவிர்ப்பது நல்லது. சுப விரய பிராப்தம் உண்டு. கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய யோகம் உண்டாகும். வாகனத்தில் வித்தைகள் காட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. விதிமுறைகளை கடைப்பிடிப்பது நன்மை பயக்கும்.
தொழிலில் வெற்றி
தொழில் மாற்றத்திற்கான அற்புதமான காலகட்டமாக இருக்கும். உங்களுடைய செல்வாக்கு, மதிப்பு கூடும். யோகமும், நம்பிக்கையும் ஏற்படும். திட்டமிட்டு காரியங்களில் வெற்றி காணும் யோகம் உள்ளது. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் அந்த செலவுகளை சந்தோஷ செலவுகளாக மாற்றிக் கொள்வது நல்லது. புதிய பொறுப்புகள், புதிய கெளரவங்கள் வந்து சேரும்.
புதிய வேலை
புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சொந்த தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். ஏழரை சனி விலகியிருப்பதால் மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். எல்லா விஷயத்திலும் கவனம் அதிகரிக்கும். இரவு நேரங்களில் தூக்காமில்லாமல் இருப்பது பாதிப்பை ஏற்படுத்தும். தூக்கத்தை தவிர்க்காமல் இருப்பது நல்லது.
கேது வழிபாடு
பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் காணப்பட்டு வந்த சிக்கல்கள் நீங்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். நவக்கிரகத்தில் இருக்கும் கேது வழிபாடு யோக பலத்தை அதிகளவில் கொடுக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடுகளைத் தவறாமல் செய்வது அற்புதமான முன்னேற்றத்தை தரும்.
-
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications