Magaram: மகர ராசிக்கு முயற்சிகளில் வெற்றி.. 7 நாட்களில் காத்திருக்குது ஜாக்பாட்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

குரு பகவான் மிதுன ராசியில் வக்கிரமாக இருக்கிறார். கேது சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். சந்திரன் தனது பயணத்தை துலாம் ராசியில் இருந்து தொடங்குகிறார். 4 கிரக சேர்க்கை தனுசு ராசியில் ஏற்படுகிறது. ராகு கும்ப ராசியில் இருக்கிறார். ஜனவரி 12 ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் பிரவேஷம் செய்கிறார். ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து நகர்ந்து மகர ராசிக்குள் நுழைகிறார். ஜனவரி 15 ஆம் தேதி தை மாதம் பிறக்கவுள்ளது.
அந்த வகையில், ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு புதிய முயற்சிகள் அனைத்தும் கைகூடும். அரசியலில் பெரிய வாய்ப்புகள் உண்டு. தை மாதத்தில் உங்களுக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கும். 15 ஆம் தேதிக்குப் பிறகு இடம், ரியல் எஸ்டேட், போலீஸ், அரசு, அரசியல் தொடர்பான துறைகளில் வேலை கிடைக்கும். அண்ணன், தம்பி மூலமாக வரும் சண்டைகள் சரியாகும்.
ஆரோக்கியம்
நீதிமன்றத்தில் நடக்கும் பஞ்சாயத்துகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. கழுத்து, முதுகு தண்டுவடம், கால் முட்டி, தலை தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. உஷ்ணம் அதிகரிக்கும். தலை முடி கொட்டுவதற்கான வாய்ப்பு ஏற்படும். எந்த முடிவுகளையும் அதிரடியாக எடுப்பீர்கள். எதற்கும் அச்சப்பட மாட்டீர்கள்.
பேச்சில் கவனம்
வண்டி வாகனங்கள், தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, குடும்பம் தொடர்பான விஷயங்களில் கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. எல்லோரிடமும் இணக்கமாகச் செல்வது நல்லது. பதட்டத்தை தவிர்ப்பது நல்லது. டென்சனை குறைத்துக் கொள்ள வேண்டும். கொடுத்த வேலைகளை சரியாக முடிக்க வேண்டும். அக்கம்பக்கத்தினர், மேலதிகாரிகள், புதிய அறிமுகங்கள், போனில் யாரிடம் பேசும்போது கூட மிகுந்த அடக்கத்துடன் பேசுவது நல்லது.
சட்டத்திற்குப் புறம்பானவர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இழுபறியாக இருக்கக்கூடிய விஷயங்கள் கூட பொறுமையாக இருந்தால் கட்டாயம் கிடைக்கும். உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. வீடு வாங்கி கிரகப்பிரவேஷம் செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகுந்த ஏற்றத்தைக் கொடுக்கும்.
வழிபாடு
அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் குழப்பங்களை ஏற்படும். சந்தோஷம் ரீதியாக 70 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 85 சதவீதம் நன்றாக இருக்கும். ருத்ரன் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications