Magaram Rasi Palan: மகரம் ராசிக்கு காத்திருக்கும் பிரகாசமான மாற்றம்.. உணர்ச்சிவசப்படாதீங்க பாஸ்
Magaram Rasi Palan: சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில், மகரம் ராசியினருக்கு இந்த மாதம் புதிய வாய்ப்புகளும் சில முக்கிய மாற்றங்களும் காத்திருக்கின்றன. தொழில், பணவரவு, உறவுகள் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்களை இங்கே பார்க்கலாம்.
சித்திரை மாதம் 2026 மற்றும் பராபவ தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது. சூரிய பகவான் மீன ராசியிலிருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சியாகியுள்ளார். இந்த சித்திரை மாதத்தில் அட்சய திருதியை நன்னாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கல் உப்பு, அரிசி, பருப்பு வாங்குவது நன்மையைத் தரும். மே 4 முதல் 28 ஆம் தேதி வரை கடும் வெயில் நிலவும்.

பராபவ வருடத்தின் முதல் மாதமான இந்த சித்திரை மாதத்தில் ஒவ்வொரு ராசியினருக்கும் நற்பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த சித்திரை மாதத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
மகரம் (Magaram Rasi Palan)
மகரம் ராசியினருக்கு ரத்தபந்த உறவுகள், தாய் வழி உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். பெற்றோர், பெரியவர்களுடன் தர்க்கம், வாக்குவாத்தை வைத்துக் கொள்ளாமல் இணக்கமாகச் செல்வது நன்மையைத் தரும். மிகப்பெரிய வெற்றிகள் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சார்ந்த விஷயங்களில் வரும் மாற்றங்களை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். நிறைய நன்மைகள் ஏற்படும்.
பணவரவு
முதலில் சிறு சிறு இழுபறியான நிலைமைகள், சங்கடங்கள் இருந்து வந்தாலும் போகப் போக மிகப்பெரிய வெற்றிகள் ஏற்படும். எதிர்பாராத ஒப்பந்தங்கள், பணவரவு ஏற்படும். யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய மாதமாக இருக்கும். எல்லா விஷயங்களிலும் அனுகூலமும், சந்தோஷமும் ஏற்படும். தொழிலில் நீண்ட நாட்களாக இருந்து வந்த சங்கடங்கள் தீரும்.
மாற்றம் முன்னேற்றம்
எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். வியாபாரத்தில் செல்வாக்கு கூடும். இடமாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம், உத்தியோக மாற்றம், படிப்பு மாற்றம் என நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும்.
உணர்ச்சிவசப்படாதீர்
மற்றவர்களிடம் தேவையில்லாமல் வாக்குவாதம் வைத்துக் கொள்ளக் கூடாது. பிறருக்காக ஜாமீன் கையெழுத்துப் போடுவது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நன்மை பயக்கும். எந்த விஷயமாக இருந்தாலும் உணர்ச்சிவசப்பட்டு வாக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும்.
கவனம்
சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். கோளார் பதிகத்தை தினந்தோறும் கேட்பது, படிப்பது தடைகளை நிவர்த்தி செய்யும். ரத்தத்தில் பரவும் தொற்று நோய்கள், நரம்பு சார்ந்த பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கோளார் பதிகத்தை சொல்வது, கேட்பது நம்பிக்கையையும், ஏற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications