Rasi Palan This Week: மகர ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் 3 கிரகங்கள்.. பண வரவு கொட்டும்
Magaram Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன் (Magaram Rasi Palan)
மகர ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு வேகமும், விவேகமும் அதிகமாக இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. ஆதிக்கத்துடன் இருப்பீர்கள். எல்லா விஷயமும் நம்மால் செய்ய முடியும், நாம் தான் செய்ய வேண்டும் என்று தோன்றும். கொஞ்சம் வேகத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. இந்த காலகட்டத்தில் கடின உழைப்பை போடுவீர்கள்.
பண வரவு கொட்டும்
கல்லீரல், மண்ணீரல், கிட்னி தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. பண விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். கையிருப்பு, சேமிப்பு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். சுக்கிரன், புதன், ராகு இணைவு பணம், பொருளாதாரத்தில் அபரிமிதமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும். காசு, பணம், குடும்பத்தில் பிரச்சனையே இருக்காது.
ஆரோக்கியம்
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய கண்ணாடி வாங்கும் யோகம் உண்டாகும். 3 ஆம் இடத்தில் சனி இருப்பதால் எல்லா காரியங்களிலும் திட்டமிட்டு வெற்றியடைவீர்கள். வக்கிரமாக இருக்கும் குரு உங்களுக்கு வந்து சேர வேண்டிய பணங்கள் வரும். பேச்சை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் தலை, கால் பகுதியில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சிவபெருமான் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
சிக்கல்கள் தீரும்
தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வாகனத்தில் சாகசங்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும். லாபம், சந்தோஷம் யோக பலத்தை அதிகளவில் பெற்றுத் தரும்.
நன்மைகள் ஏராளம்
எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கக்கூடிய நல்ல காலகட்டம். உணவுத் துறை, அரசுத் துறை, அரசாங்க காரியங்களில் பணியாற்றுபவர்கள்
சட்டத்திற்குப் புறம்பானவர்களின் தொடர்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கூடா நட்பு கேடு விளைவிக்கும் என்பதால் கவனம் தேவை. இரவு நேரத்தில் வேலை முடிந்தவுடன் வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது நல்லது.
தேவையில்லாமல் நண்பர்களுடன் சென்று கேளிக்கைகளில் ஈடுபடுவது, சந்திப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. தினந்தோறும் உடற்பயிற்சியை கட்டாயமாக படிப்பது நல்லது. அனுமன் சாலிஷா கேட்பது ஏற்றத்தைத் தரும்.












Click it and Unblock the Notifications