Magaram: மகர ராசிக்கு வெற்றிகள் குவியும்.. ஒரு விஷயத்தில் ரொம்ப கவனம்
Magaram Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கிரக நிலைகள்
புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் நிறைவடைந்து பிப்ரவரி 13 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. சூரியன் கும்பத்திற்கு பிரவேஷம் ஆகிறார். சூரியன், புதன், சுக்கிரன், ராகு, திரிகோணத்தில் குரு வக்கிரமாக அமர்கிறார். இந்த 4 கிரகங்கள் சேருவது நல்லது இல்லை. அதுவும், புதனும் ராகுவும், சுக்கிரனும் ராகுவும், சூரியனும் ராகுவும் சேருவது மோசமான நிலையாகும். இப்போது 4 கிரகங்களும் சேருவது பொதுவாக நன்மையைத் தராது. சனியின் வீட்டில் 4 கிரகங்கள் இருந்தாலும் குருவின் பார்வை பலத்தால் இருப்பதால் சிறு சிறு பிரச்சனைகள் நீங்கும்.
இந்த வார ராசி பலன்
சிங்கப்பூர், சிவகங்கை, தேவக்கோட்டை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கோயில்களில் தீ விபத்து, அசம்பாவிதங்கள், சிலிண்டர் வெடிப்பது, அரசியல் கட்டடங்களில் தாக்குதல், விமான விபத்து போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கலை உலகம் சார்ந்த நபரின் உயிரிழப்பு ஏற்படும். இந்த வாரத்தில் மகரம், ரிஷபம், கன்னி ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன் (Magaram Rasi Palan)
மகரம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் யோகம் உண்டாகும். நினைத்த எல்லா காரியங்களிலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். மனநிலை அற்புதமாக இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள், தேவையற்ற குழப்பங்கள் எல்லாம் நீங்கும். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக நடக்கும்.
வெற்றி மேல் வெற்றி
உங்களால் எல்லா விஷயங்களும் செய்ய முடியும் காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் நிச்சயமாக வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பல் சம்பந்தப்பட்ட, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து போகும். அறுவை சிகிச்சை செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். பணம் தொடர்பான விஷயங்களில் விட்டுக் கொடுத்துச் செல்லும் யோகம் உண்டாகும்.
செலவில் கவனம்
வரும் பிப்ரவரி 13, 14 ஆம் தேதி செலவுகள், ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சுப விரய பிராப்தம் உண்டாகும். தொழில் ரீதியாக அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் ஏற்றம், புதிய தொழில் மாற்றம், வியாபாரத்தில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். யோக பலத்தை அதிகளவில் பெறும் யோகம் உண்டாகும்.
அனுகூலம்
தொழிலில் யோகம், அனுகூலம், நம்பிக்கை ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். ரத்தத்தில் பரவும் தொற்றுநோய் பாதிப்புகளில் கவனமாக இருப்பது முக்கியம். லிவர், கிட்னி செயல்பாடு தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வது நன்மையைத் தரும். நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications