Rasi Palan This Week: மகர ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. எதிரிகள் விஷயத்தில் ரொம்ப கவனம்
Magaram Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன் (Magaram Rasi Palan)
மகர ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு மேலதிகாரிகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கோபப்படுவது, வாக்குவாதம் செய்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியத்தில் நரம்பு, கண், கழுத்து சம்பந்தப்பட்ட விஷயத்தில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
பொறுமை அவசியம்
பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்பது நன்மையைத் தரும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் சாதகமான சூழல் இருந்தாலும் அதனை வெளியில் பேசாமல் இருப்பது நல்லது. குறிப்பாக, வேறு வேலை கிடைத்தால் சொல்வது, பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைத்தால் சொல்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
எதிரிகள் தொல்லை
உங்களுடைய பயணங்கள், குடும்பங்கள், நண்பர்கள், முன்னேற்றம் தொடர்பான விஷயங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவது, எல்லோரிடமும் சொல்வது போன்றவற்றை செய்யக் கூடாது. எல்லா விஷயங்களிலும் எதிரிகள் தொல்லை அதிகமாக இருக்கும் என்பதால் எந்தப் பிரச்சனைகளிலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
கவனம்
ஏழரை சனி விலகி இருந்தாலும் அஷ்டமாதிபதி ராசியிலேயே இருப்பதால் அதீத கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது சாகசம் செய்யாமல் செய்வது நல்லது. படிக்கட்டுகளில் நிதானமாக செல்வது நல்லது. லிப்டுகளில் செல்லும்போதும் கவனம் தேவை. விஷ ஜந்துக்கள் விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். உங்கள் நலன் விரும்பிகள், குடும்பத்தினரைத் தவிர எல்லா விஷயங்களையும் மற்றவர்களிடம் சொல்லாமல் இருப்பது நன்மை பயக்கும்.
அனுகூலம்
அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். சொத்துகள் அமைப்பில், உறவுகள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். ரத்த பந்த உறவுகளில் ஏற்றமும், அனுகூலமும் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
Tamil Puthandu Rasi Palan: மீனம் ராசிக்கு கோடிகளை குவிக்கும் நேரம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications