Rasi Palan This Week: மகர ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. முயற்சிகளில் வெற்றி
Magaram Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். அந்த வகையில், மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன் (Magaram Rasi Palan)
மகரம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு டாப் கிளாஸாக இருக்கும். எல்லா முயற்சிகளும் ஜெயிக்கும் நல்ல காலகட்டம். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பல விஷயங்கள் சாதகமாக முடியும். சிஸ்டம், ஐடி, சாஃப்ட்வேர், கம்யூனிகேஷன், மீடியா, யூடியூப் தொழிலில் இருப்பவர்களுக்கு அற்புதமான யோகம் உண்டாகும். பெண்களுக்கு நிறைய பேருக்கு விருதுகள் கிடைக்கும்.
வரன் அமையும்
நிறைய நண்பர்கள் அமைவார்கள். ஆன்லைனில் வரன் அமையக் கூடிய யோகம் உண்டாகும். புதிய முயற்சிகள் நன்றாக இருக்கும். பேச்சில் மட்டும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. அமைதியைக் கடைப்பிடிப்பது நன்மை. பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்வீர்கள். குடும்பத்தில் சில விஷயங்கள் சரியில்லை என்பதால் குடும்பத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
முன்னேற்றம்
காது, மூக்கு, தொண்டை, அசிடிட்டி போன்ற விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் நல்ல மாற்றம் உண்டாகும். நரம்பு மண்டலப் பிரச்சனைகளில் அதிக கவனம் தேவை. விநாயகர் வழிபாடு சகலவிதமான தடைகளையும் தவிடு பொடியாக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும்.
வார்த்தைகளில் கவனம்
இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் மாறும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறக்கூடிய சாத்தியங்கள் உண்டாகும். தொழிலில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தரவாதத்துடன் எடுக்கக்கூடிய முடிவுகளால் பலரால் பாராட்டைப் பெறுவீர்கள். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்திலும், வெளியிடத்திலும் வார்த்தைகளால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
வழிபாடு
விநாயகர் வழிபாடு செய்வது, காரியசித்தி மாலை சொல்லி வருவது பெரிய பலத்தை ஏற்படுத்தும். தடைகளை தவிடுபொடியாக்கி தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம். பதவி உயர்வில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய நல்ல காலகட்டம் என்பதால் இதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. இளைய சகோதரன், சகோதரி மூலமாக நிறைய நன்மைகள் நடக்கும்.
பணவரவு
மாமனாரின் அரவணைப்பு, அன்பு கிடைக்கும் நல்ல காலகட்டம். ஆன்லைனில் பணம் வருவதற்கான சூழல் உண்டாகும். ரங்கநாதப் பெருமாளை வணங்குவது ஏற்றத்தைத் தரும். சந்தோஷம் ரீதியாக 90 சதவீத நன்மைகளும், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீதமும் நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணைக்கு அடிவயிறு, முட்டி தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும்.












Click it and Unblock the Notifications