Rasi Palan This Week: மகர ராசி பிரச்னைக்கு எல்லாம் எண்டு கார்டு.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு
Magaram Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன் (Magaram Rasi Palan)
மகரம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு வழக்குகளில் வெற்றி ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். சுபவிரய பாக்கியம் உண்டாகும். தொழில் மாற்றம், இடமாற்றம், படிப்பு மாற்றம், உத்தியோக மாற்றம் என அனைத்து விதமான நல்ல மாற்றங்களும் உண்டாகும். மனதில் இருந்து வந்த ஒரு மாதிரியான சங்கடங்கள் எல்லாம் நீங்கும். நம்மை விட்டு விலகிச் சென்றவர்கள் தேடி வரக்கூடிய யோகம் உண்டாகும்.
சங்கடம் தீரும்
திருமணத்தில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு புதிய காதல் ஏற்படும். திருமணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுமண அமைப்பு உண்டாகும். திருமண உறவுகளில் இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியிடத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். நல்ல பெயர்கள் கிடைக்கும். உறவு முறையில், நட்பு முறையில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும்.
பணவரவு
பணவரவில் இருந்த சிக்கல் தீரும். வேற்றுமொழி மனிதரால் ஆதாயம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். செல்வாக்குகள் கூடும். வண்டி வாகனங்களை மாற்றுவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். நல்ல பதவிகள், பொறுப்புகள் கிடைக்கும். மற்றவர்களுக்காக பயப்படாத சூழ்நிலை ஏற்படும். வேலை, தொழில், அந்தஸ்து, உத்தியோகம், வியாபாரம் நன்றாக இருக்கும்.
ஆரோக்கியம்
வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. சின்ன கட்டிகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். பணவரவு, தைரியம், சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. 10 ஆம் இடத்தில் 2 பாவ கிரகங்கள் இருப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படும். நிறைய ஏற்றங்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். ஆஞ்சநேயர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்ட காரியங்கல் துலங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முதுகுத் தண்டுவட பாதிப்புகள், கால், கை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாகவும், விதிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம். நவக்கிரகத்தில் புதன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications