This Week Rasi Palan: மகர ராசிக்கு அடுத்தடுத்து வரும் லக்.. ஒரு விஷயத்தில் மிக மிக கவனம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

magaram-weekly-rasi-palan-magaram-capricorn-rasi-people-will-get-good-benefit-from-september-21-t

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. இந்த வாரத்தில் செப்டம்பர் 22 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. செப்டம்பர் 22, புரட்டாசி 6 முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரைக்கு வழிபாடு செய்யப்படும். அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். பெற்றோர், பெரியோர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. முதலீடு தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முதலீடுகளைச் செய்வது நன்மை பயக்கும்.

சுப விரையம்

தொழில், உத்தியோகம், வியாபாரம் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுப விரைய பிராப்தங்கள் உண்டாகும். அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக் கூடிய நல்ல அமைப்பு உண்டாகும். வயிற்றில் அஜீரண கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கழிவுப் பாதையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும்.

சொந்த தொழில்

தலைமுறையாக இருக்கும் நோய் உபத்திரவங்கள் வரக்கூடிய வாய்ப்புள்ளதால் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. தொடர்ச்சியாக இருந்து வந்த மனக் கசப்புகள், மனத் தாங்கல்கள் நீங்கும். தொழில் ஏற்றம் பெறும். பண வரவு அதிகரிக்கும். வேலையை விட்டு சொந்த தொழில் தொடங்கும் யோகம் உள்ளது. அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

பயணங்களால் அனுகூலம்

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சமுதாயத்தில் இருக்கும் பெரிய மனிதர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் அடுத்தடுத்து நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

வழிபாடு

ஆரோக்கியத்தில் மட்டும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. பரம்பரை பரம்பரையாக இருக்கும் நோய்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மற்றபடி அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக அமையும். ஏற்றங்கள் மிகுந்த காலகட்டமாக இருக்கும். திங்கள்கிழமைகளில் தேவி வழிபாடு, அம்பாள் வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+