Magaram Rasi Palan: மகர ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. வரி விஷயங்களில் கவனம்
வார ராசி பலன்: ஆகஸ்ட் 19 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு
அந்த வகையில், ஆகஸ்ட் 19 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு அதி அற்புதமான வாரமாக இந்த வாரம் அமையும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் ஏற்றமும், அனுகூலமும் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல விதமான லாபம் கிடைக்கும். கணக்கு வழக்குகள், ஜிஎஸ்டி, கமர்ஷியல் வரி, வருமான வரி போன்ற விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இந்த விஷயங்களிலும் யாரையும் நம்பி சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
கவனம்
தனிப்பட்ட முறையில் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். நீண்ட நாட்களாக இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாாகும். தொடர்ச்சியாக இருந்து வந்த மன ரீதியான பாதிப்புகள் அனைத்தும் தீரும். நரம்பு சம்பந்தப்பட்ட, முதுகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
அனுகூலம்
தொழிலில் எல்லா விதமான அனுகூலமும் காணப்படும். திடீரென ஆவணி மாத ஆரம்பத்தில் இருந்து அதீத அலைச்சலோ, மன வருத்தமோ காணப்படும். ஆவணி மாதம் முடிவடையும் வரை அனுமன், விநாாயகர் வழிபாடு செய்வது நல்லது. பொறுமையும், நிதானமும் மிகவும் அவசியமாகும். வார்த்தைகளில் கோபத்தை தவிர்ப்பது நல்லது.
முடிவுகளில் கவனம்
வேலையை விட்டு விடலாம், பேப்பர் போட்டு விடலாம் என்கிற சிந்தனைகள் வரும். ஆனால், அவசரப்படாமல் ஆவணி மாதம் முடியும் வரை எந்தவிதமான முக்கிய முடிவுகளும் எடுக்காமல் இருப்பது நல்லது. ஆவணி மாதம் முடிந்த பிறகு எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பது நன்மை பயக்கும்.
தொழில்
தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும், புதிய ஐடியாக்களும் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு திருப்தியை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். விநாயகர் வழிபாடு அனைத்து விஷயங்களிலும் வெற்றியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications