Rasi Palan This Week: ஜாவா சுந்தரேசனை விடுங்க - மகர ராசியை மாற்றும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 20 முதல் 26 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Weekly rasi palan Makaram Lucky zodiac signs

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்து நிறைவடைந்துள்ளது. அக்டோபர் 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமாக இருக்கும். சுப காரிய தடைகள் விலகும். யோக பலன்களை அதிகளவு பெறுவீர்கள். சுப காரிய தடைகள் விலகி, அடுத்தடுத்து நல்ல செய்தி வீடு தேடி வரும். திருமணம் நடை பெறாதோருக்கு திருமணம் தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும். குழந்தை பாக்கியம் முயற்சில் இருப்போருக்கு முன்னேற்றம் காணப்படும்.

குடும்பம்

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகி மகிழ்ச்சியான சூழல் பிறக்கும். வாழ்க்கை துணையுடன் இருந்த பனிப்போர் விலகி, அந்யோநியம் அதிகரிக்கும். காதல் அமைப்பில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு காதல் உறவு திருமணத்தில் நிறைவேறும். உத்யோகம் தொழிலில் ஏற்றம் உண்டாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும்.

இட மாற்றம்

வீடு, உத்யோகம், தொழில் உள்ளிட்டவற்றில் இட மாற்றம் நிகழும். சொந்த வீடு கன நனவாவதற்கு வாய்ப்புள்ளது. நிலம், வீடு, வாகனங்கள், ஆடை, ஆபரணம் உள்ளிட்ட அசையும் அசையா சொத்து பொருட்களின் சேர்க்கை இருக்கும். புதிய முதலீடுகளில் இறங்குவீர்கள். பலருக்கு முதலீடுகளில் லாபம் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

தைரியம்

உத்யோகம், குடும்பம், வெளியிடம் ஆகியவற்றில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். சமூகத்தில் உங்களின் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை கூடும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் உயரும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் நல்ல வெற்றி உண்டாகும்.

வெற்றி

வேற்று மொழி மனிதர்களால் அதிகம் ஆதாயம் அடைவீர்கள். திடீர் பண வரவு, திடீர் அதிர்ஷ்டம் உங்கள் வீடு தேடி வரும். தொழிலில் நீண்ட காலமாக திட்டமிட்ட விஷயங்களை இந்த காலத்தில் நிறைவேற்றுவீர்கள். புதிய தொழில் தொடங்குவது, தொழிலில் அபிவிருத்தி செய்வது போன்ற மாற்றங்கள் நிகழும். இறங்கிய அனைத்து காரியங்களில் வெற்றிகள் குவியும்.

கவனம்

சளி, தொண்டை, பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் அதிக எச்சரிக்கை வேண்டும். சிறிய பிரச்சனையாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது. எதிர்பாலினத்தவர் விஷயத்தில் அதிக கவனம் வேண்டும். குடும்பத்தில் மூன்றாம் மனிதர் தலையீடு இல்லாமலும், பிறர் குடும்பத்தில் உங்கள் தலையீடு இருக்கவே கூடாது. திங்கள்கிழமை தோறும் பெருமாள் கோயில் சென்று தரிசனம் செய்வது வாழ்வில் ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+